சுயமரியாதையுடைய எந்தவொரு நாடும் ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ளாது!– மஹிந்த

324

 

சுயமரியாதையுடைய எந்தவொரு நாடும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ளாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
north_graduate_001

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கை தொடர்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு தமது அரசாங்கம் எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்காது.

மனித உரிமை ஆணைக்குழு சுயாதீனமானது என்பதே சந்தேகத்திற்குரியது எனவும் எனவே சுய கௌரவம் கொண்ட எந்தவொரு நாடும் இவ்வாறான ஓர் அறிக்கையை ஏற்றுக்கொள்ளாது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கொள்கைகள் நியதிகளுக்கு முரணான வகையில் இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட காரணத்தினால் தமது அரசாங்கம் எந்தவிதமான ஒத்துழைப்பையும் விசாரணைகளுக்கு வழங்கவில்லை

இலங்கை தொடர்பில் சுயாதீன விசாரணைக் குழு நிறுவி விசாரணை நடத்தப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கான நிதியும் அதிகளவில் மேற்குலக நாடுகளினால் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் நிறுவனத்தின் சுயாதீனத்தன்மை குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கோ அல்லது ஆணையாளருக்கோ போர்க்குற்றவியல் நீதிமன்றை உருவாக்கமுடியாது.

பாதுகாப்புப் பேரவையின் ஊடாகவே போர்க் குற்றவியவல் நீதிமன்றத்தை உருவாக்க முடியும். அதற்கு சீனாவும் ரஸ்யாவும் ஆதரவளிக்காது.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது ஏனெனில் ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை.

இலங்கையர்களை போர்க்குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக் கூடிய ஒரேயொரு வழி ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து இலங்கையில் கலப்பு நீதிமன்றமொன்றை அமைப்பதேயாகும்.

எனவே இவ்வாறான ஓர் திட்டத்திற்கு இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

SHARE