சூரியனுக்குள் ஒரு ஓட்டை: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

742
சூரிய மண்டலத்தில் ஒரு சதுரவடிவான ஓட்டை இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், இந்த சதுரவடிவமான ஓட்டையை கமெராவில் புகைப்படம் எடுக்கும்போது மின்மினி பூச்சி போல மின்னுகின்றது.

மேலும் கமெரா மூலம் அந்த பகுதியை கடந்து செல்கையில், தீப்பற்றி எரிவதுபோல் தீப்பொறிகள் தோன்றுகிறது.

இந்த காணொளி மே மாதம் 5ம் திகதி முதல் 7ம் திகதி வரை, இரண்டு நாட்களாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய ஒட்டையினால், பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆனாலும் பிற்காலத்தில் சூரிய எரிப்பு சீற்றங்கள், விமானப் போக்குவரத்திற்கு ஆபத்து விளைவிக்ககூடும் என்று கருதுகின்றனர்.

SHARE