சைப்-ப்ரியங்கா மீண்டும் ஜோடி சேருகின்றனர்…

357

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா, சல்மான் கான், ஷாரூக்கான், அமீர்கான், சைப் அலிகான் உள்ளிட்ட பலருடன் ஜோடி போட்டு விட்டார். இந்நிலையில், சைப் அலிகானும், ப்ரியங்கா சோப்ராவும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபுதேவா அடுத்து இயக்க இருக்கும் படத்தில் ப்ரியங்கா சோப்ராவும், சைப் அலிகானும் ஜோடி சேர இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக ரேஸ்-2, காக்டாயில் போன்ற படங்களில் சைப்புடன் நடிக்க ப்ரியங்காவுக்கு அழைப்பு வந்தது. ஆனால் அப்போது ப்ரியங்கா பல படங்களில் பிஸியாக இருந்ததால் சைப் அலிகான் உடன் நடிக்க முடியவில்லை. மேலும் அயிட்ராஸ் படத்தில் ப்ரியங்காவும், கரீனா நடித்தபோது அவர்களுக்குள் மோதல் உருவானது. இந்தமோதல் பல ஆண்டுகளாக தொடர்ந்தது. இதன்காரணமாக கூட ப்ரியங்கா, சைப்புடன் ஜோடி சேர மறுத்து வந்தார்.

இந்நிலையில் தற்போது கரீனாவும், ப்ரியங்காவும் தங்களது பழைய பகையை எல்லாம் மறந்து நண்பர்களாகி வருகின்றனர். ஆனால் சைப்புடன், ப்ரியங்கா நிச்சயம் ஜோடி சேருவார் என்கிறார்கள்.

 

SHARE