ஜனாதிபதி மஹிந்தவை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதன் மூலமே எமது வேலை நிலைக்கும்.-மிரட்டல் பாணியில் ஜெகத்

475

DSCF3477 copy DSCF3481

மேல் மாகாண சபை உறுப்பினரும் சமுர்த்தி அபிவிருத்தி, மற்றும் விவசாய ஆராய்சி உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் செயலாளருமான ஜெகத் புஸ்பகுமார. கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்.31) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார் எனக் கூறப்படுகின்றது

. அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமுர்த்தி வேலை ஜனாதிபதி மஹிந்தவால் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுமாக இருந்தால் இந்த வேலை கூட இல்லாமல் போகும்.

அதனால் எமக்கு தொழில் தந்து எம்மை வாழ வைத்த ஜனாதிபதி மஹிந்தவை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதன் மூலமே எமது வேலை நிலைக்கும். அதற்காக இந்த நவம்பர் மாதத்தை நாடு பூராவும் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு சமுர்த்தி உத்தியோகத்தர்களும் சிறு குழுக்களாக உங்கள் பகுதியில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும். அவர்களிடம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களிககுமாறு அறிவிவுறுத்துவதுடன் அவர்களின் பெயர், விலாசம், கையொப்பம் என்பவற்றை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வேலைகள் இந்த மாதத்திற்குள் பூர்த்தியாக்கப்பட வேண்டும். இதன் மூலம் 28 லட்சம் பேர் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களிக்க முடியும். அவர்கள் ஒவ்வொருவரும் வீட்டில் உள்ள இன்னொருவரை மஹிந்தவுக்கு வாக்களிக்க செய்யும் போது 56 இலட்சம் பேர் ஜனாதிபதி மஹிந்தவுக்காக வாக்களிக்க முடியும். இதன் மூலம் அவரின் வெற்றி உறுதியாகும்” என்றார்.

SHARE