இங்கிலாந்து ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடந்த காட்சி டி20 போட்டியில் டோனியின் அதிரடியால் ஹீரோஸ் லெவன் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த இந்த காட்சி டி20 போட்டியில் ஹீரோஸ் லெவன் மற்றும் ரெஸ்ட் ஆப் தி வேல்ட் லெவன் அணிகள் மோதின.
ஹீரோஸ் லெவன் அணியில் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் (அணித்தலைவர்), ஹெர்ஷல் கிப்ஸ், ஷேவாக், டோனி போன்ற முக்கிய வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அதே சமயம் ரெஸ்ட் ஆப் தி வேல்ட் அணியில் பிரண்டன் மெக்கல்லம் (அணித்தலைவர்), மேத்யூ ஹெய்டன், கிரேம் ஸ்மித், ஜெயவர்த்தனே, பிரையன் லாரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரெஸ்ட் ஆப் தி வேல்ட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது.
ஹேடன் 34 ஓட்டங்களும், ஜெயவர்த்தனே 48 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன் பின்னர் சற்று கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஹீரோஸ் லெவன் அணிக்கு அணித்தலைவர் ஸ்ட்ராஸ் 26 ஓட்டங்கள் எடுத்தார். அதிரடி வீரரான ஷேவாக் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
சிறப்பாக அடிக் கொண்டிருந்த டோனி 3 பந்து எஞ்சியுள்ள நிலையில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இவர் 22 பந்தில் 38 ஓட்டங்கள் குவித்தார். ஆட்டநாயகன் விருதையும் டோனி தட்டிச் சென்றார்.