பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரான்ஸில் வாழும் பெண்ணொருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக பொது உறவுகள் மற்றும் பொது விவகார அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணுக்காக அவர் ராஜகிரிய பிரதேசத்தில் வீடொன்றை கொள்வனவு செய்துள்ளார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பத்திரிகை ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஞானசார தேரர் போன்றவர்கள் ஜனாதிபதி அல்லது நாட்டின் மரியாதைக்குரிய பதவிகளுக்கு மக்கள் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
அவரை விட சிறந்த கல்வி அறிவையும் மரியாதைகளை கொண்ட பிக்குமார் நாட்டில் உள்ளனர்.
ஞானம் என்ற பெயர் ஞானமுள்ள அறிவை குறிக்கின்ற போதிலும் அவ்வாறான ஞானம் ஞானசார தேரரிடம் இல்லை.
ஞானசார தேரர், அவருடைய பெயரை அஞ்ஞான சார என்று மாற்றிக்கொள்ள வேண்டும். இவர்களை போன்ற கொள்கைகளை கொண்டுள்ளவர்களை அனைத்து மக்களும் நிராகரித்துள்ளனர்.
ஞானசார தேரர் தான் அணிந்துள்ள காவியை தவறாக பயன்படுத்துவது இங்குள்ள முக்கியமான பிரச்சினை.
போர் நடைபெற்ற காலத்தில் ஞானசார தேரர் எங்கிருந்தார். அப்போது அவரை காணமுடியாதிருந்தது எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.