மகளிர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் தரவரிசைப் பட்டியலில் சீனாவின் பெங் ஷுவாயுடன் இணைந்து தைவானின் ஹெய் ஸ-வெய் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதனால், டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த முதல் தைவான் வீராங்கனை என்ற சாதனையை ஸ வெய் படைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “சர்வதேசத் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது அற்புதமானது. இதற்காக நாங்கள் இருவரும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தியுள்ளோம்’ என்றார்.
இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை 11 டென்னிஸ் பட்டங்களை வென்றுள்ளனர். இந்த ஜோடி, ஒரு முறை கூட இறுதிச்சுற்றில் தோற்றதில்லை என்ற பெருமையை பெற்றுள்ளது.