டோனி கதை படமாகிறது 

426

கடந்த 2012ம் ஒலிம்பிக் போட்டியில் குத்து சண்டையில் வெண்கல பதக்கம் வென்றதுடன், ஆசிய விளையாட்டு போட்டியில் தற்போது தங்க பதக்கம் வென்ற மேரி கோம் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக உருவானது. இதில் பிரியங்கா சோப்ரா நடித்தார். சமீபத்தில் வெளியான இப்படம் வெற்றிபெற்றதையடுத்து பாலிவுட்டில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி அதிகரித்து வருகிறது.  அடுத்து கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இதன் தொடக்க விழா நடக்க உள்ளது. இயக்குனர்&தயாரிப்பாளர் நீரஜ் பாண்டே இரண்டொரு வாரத்தில் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். இதுபற்றி பட குழுவினர் கூறும்போது,‘டோனியின் வாழ்க்கை கதையாக உருவாக்கும் முயற்சி நல்லபடியாக கூடி வந்துள்ளது. மும்பை பத்திரிகை சிலவற்றில் தனது வாழ்க்கை வரலாறு படம் எடுக்க அனுமதி கொடுப்பதற்கு டோனி பணம் கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால் உண்மை அதுவல்ல. அவர் எங்களிடம் பணம் எதுவும் கேட்கவில்லை’ என்றனர்

 

SHARE