தமிழ் சினிமாவிற்கு என தற்போது பல விதிமுறைகள் வந்துவிட்டது. அதிலும் தயாரிப்பாளர்கள் ஒரு படத்திற்கு விளம்பரத்திற்காக இத்தனை கோடி தான் செலவு செய்ய வேண்டும் என ஒரு விதிமுறை வந்துள்ளது.
இதனால் பல படங்கள் சரியான விளம்பரம் இல்லாமல், தோல்வியை சந்திக்கின்றது. இதற்கு பெரிய உதாரணம் பாயும் புலி.
தற்போது தனி ஒருவன் படத்தை அதிக விளம்பரப்படுத்திய காரணத்திற்காக இனி படம் தயாரிக்க தடை என கூறியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இது நடைமுறைப்படுத்த படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.