இலங்கையில் ஆட்சி மாற்றம் அல்லது நாட்டின் தலைவரை தீர்மானிக்கும் சக்தி சிங்கள மக்களின் வாக்குகளில் மட்டுமே தங்கியுள்ளது. சிறுபான்மை மக்கள் அல்ல என்ற எண்ணக் கருவை மக்கள் மத்தியில் கொண்டு வந்துள்ளமையாலும் தமிழ், முஸ்லிம் சமூகம் தனித்து செயற்படுகின்றமையாலும் சிங்களப் பேரினவாத அரசியல் தலைவர்கள் எம் சமூகத்தை அடக்கப்பட்ட சமூகமாகவே கருதுகின்றனர். எனினும், வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் ஓரணியில் ஒன்று சேர்வோமாயின் இன்று நாங்களும் இந்த நாட்டின் தலைமையைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவோம். பொது எதிரணியாக ஒன்று திரள முன்னர் எமது உரிமைகளையும் இப்போது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு என்ன தேவை என்பதனையும் நாம் உணரவேண்டிய தேவை உள்ளது. எனவே, இப்போது நாங்கள் சரியான தீர்மானம் எடுப்பதன் மூலம் இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் முடியும். இவை சாத்தியமாகுமாயின் சோபித தேரரின் கருத்து உண்மையாக மாறும்” என்றார். |