திடீரென வருகை தந்த ஒபாமாவை சந்திக்க மறுத்த ஆப்கன் அதிபர் கர்சாய்

550

ஆப்கானிஸ்தானுக்கு திடீரென வருகை தந்த ஒபாமாவை சந்திக்க அந்நாட்டு அதிபர் கர்சாய் மறுத்துவிட்டார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. அப்படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட உள்ளன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமா திடீரென ஆப்கானிஸ்தான் வந்தார். அங்குள்ள பக்ராம் விமான படை தளத்துக்கு சென்று அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். பின்னர் அமெரிக்கா திரும்பினார்.

ஆப்கானிஸ்தான் சென்ற ஒபாமா பக்ராம் விமான தளத்தில் அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாயை சந்திக்க விரும்பினார். ஆனால் அவரை சந்திக்க கர்சாய் மறுத்துவிட்டதாக அமெரிக்க பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.

கடைசி நேரத்தில் ஒபாமா வருகை பற்றிய தகவல் கர்சாயிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவி எற்பு விழாவில் பங்கேற்க புதுடெல்லி சென்றவிட்டதாக கூறப்பட்டது.

கடந்த சில நாட்களாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கும் இடையே சுமூக உறவு இல்லை. ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கவும், தீவிரவாதிகளை ஒடுக்கவும் தனது ராணுவத்தின் ஒரு பகுதி அங்கு தொடர்ந்து முகாமிட்டு அமெரிக்கா விரும்புகிறது.

அதற்கு ஒப்புதல் அளிக்க கர்சாய் மறுத்தவிட்டார். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

SHARE