மிரிஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் வீட்டில் உள்ள சமையலறையில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை சேகரித்து எரிவாயுவை உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளார்.
முகமது பிர்தாவிஸ் ரஷீத் என்ற நபர், வீட்டின் சமையலறையில் இருந்து வீசப்படும் அழுகும் குப்பைகளை சேகரித்து பேரல்களில் சேகரித்து எரிவாயு தயாரித்துள்ளார்.
இந்த கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு விடாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து எரிவாயு உற்பத்தியாக்கி, வீட்டில் உணவு சமைக்க அந்த எரிவாயு பயன்படுத்தப்பட்டுள்ளது.
எரிவாயு உற்பத்தி
எரிவாயு உற்பத்திக்குப் பிறகு, திரவ உரம்...
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும் எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என மின்சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக அறிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
எரிபொருள் இறக்குமதி
எரிசக்தி துறையுடன் தொடர்புடைய இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் செயற்பாடுகளுக்காக இளைஞர் சேவை சபையின் சொத்துக்களை பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென முறைப்பாடு செய்ய உள்ளதாக சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலஞ்ச ஊழல் மோசடி
இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் இந்த முறைப்பாடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாட்டை நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பொருளாதாரம் ஸ்திரமடைந்து விட்டதாகவும், பொருளாதாரத்தில் தற்போது வளர்ச்சி உருவாகி வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி 2022இல் 360 ரூபாவாக இருந்த நிலையில், இன்று அது 300 ரூபாயாக குறைவடைந்துள்ளமையை வளர்ச்சிக்கு உதாரணமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
அத்துடன், இலங்கையில் மாற்று விகிதங்கள் சந்தையில் நிர்ணயிக்கப்பட்டவை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமாகும்.
ரூபாவின் பெறுமதி
இது, அந்நிய செலாவணி சந்தையில் வழங்கல் மற்றும் தேவை இயக்கவியலுக்கு ஏற்ப நாணய...
கொரியாவில் நூல் மற்றும் துணி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சென்ற இலங்கை இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி உடல்நிலை மோசமான நிலையில், கொரியாவின் டேகுவில் உள்ள அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாளை (28 ஆம் திகதி) சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த இளைஞரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சகோதரர்
தனுஷ்க மதுராந்த வீரரத்னவின் மரணத்தினால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்த தனுஷ்க...
வங்கிக் கணக்குகளில் சுமார் 60 வீதமான வங்கிக் கணக்குகளின் மீதி 5000 ரூபாவிற்கும் குறைவானது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வரிச் செலுத்துவதனை தவிர்க்கும் நபர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி கணக்கு
மேலும் தெரிவிக்கையில், சுமார் மூன்று கோடியே நாற்பது இலட்சம் வங்கி கணக்குகளில் ஐயாயிரம் ரூபாவிலும் குறைந்த தொகையே வைப்பு நிலுவையாக காணப்படுகின்றது.
நாட்டின்...
பதுளை – பிட்டமாருவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் இளம் ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் பதுளை – லுணுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணாவார்.
இவர் குறித்த பாடசாலையின் ஆசிரியை விடுதியில் வசித்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விடுதிக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லை
இவர் நேற்று (24) பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின் விடுதிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் ஆசிரியை விடுதிக்குச் சென்றவர்...
இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த வெள்ளை மனசு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மற்றும் இந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார். பின் ரஜினியின் படையப்பா படத்தின் மூலம் வில்லியாக பட்டையை கிளப்பினார். ரம்யா கிருஷ்ணன் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் கதாபாத்திரங்களில் நீலாம்பரியும் ஒன்று.
இதன்பின்...
நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இந்திய அளவில் பாப்புலரான நடிகை தான். தமிழ், தெலுங்கு படங்களில் முக்கிய நடிகையாக இருப்பது மட்டுமின்றி, சோலோ பாடல்கள் மூலமாகவும் அவர் பாப்புலராகி வருகிறார்.
சமீபத்தில் அவரது 'இனிமேல்' என்று பாடல் பெரிய அளவில் வைரல் ஆனது. அதில் ஸ்ருதி ஜோடியாக லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து இருந்தார்.
பிரேக்கப்
ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை...
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது இந்தியளவில் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். ஜவான் படத்தின் வெற்றிக்கு இவருக்கு நல்ல ரீச் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
தொடர்ந்து பாலிவுட் பக்கம் நயன்தாரா கவனம் செலுத்தவுள்ளார் என சொல்லப்படுகிறது. நயன்தாரா கைவசம் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உள்ளன.
உலகில் ஒருவரை போல் 7 பேர் இருப்பார்கள் என கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். அதை பல இடங்களில் பார்த்தும் இருப்போம். அதுவே நமக்கு மிகப்பெரிய ஆச்சர்யங்களை...