தாய்லாந்தில் இந்த ஆண்டு அதிக வெப்பமான காலநிலை காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பாங்கொக்கில் வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஷ
நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை பிலிப்பைன்சில் அதிக...
ஆஸ்திரேலியாவின் டன்ஸ்பாராக் உள்ள கடற்கரையில் நேற்று திடீரென கூட்டம் கூட்டமாக அரிய வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளமை ஆச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 160க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதாக கூறப்படுகின்றது. இந் நிலையில், அவற்றில் பல உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதனையடுத்து திமிங்கலங்களை உயிருடன் மீட்கும் முயற்சியில் வன ஆர்வலர்கள் இறங்கினார்கள்.பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் சுமார் 100-க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை படகு...
ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மொஹமட் ரெஸா அஸ்டியானி உள்ளிட்ட சிலருக்கு எதிராக கனடா தடை விதித்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதனை எதிர்த்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இரண்டு நிறுவனங்கள் இரண்டு பாதுகாப்பு பிரதானிகள் மீது தடை அறிவிக்கப்பட்டுள்ளது.கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இந்த தடை குறித்து அதிகாரபூர்வ அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.
கடந்த 13ம் திகதி ஈரானிய அரச படையினர் இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியிருந்தது.சிரியாவில் அமைந்துள்ள...
அமெரிக்காவில் வெள்ளைமாளிகைக்கு அருகில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
காசா யுத்தத்தின் மத்தியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் அமெரிக்க பல்கலைகழகங்கள் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களில் தங்களுக்கு உள்ள தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதற்காகவும் வோசிங்டனை சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் செயற்பாட்டாளர்களும் அங்கு குழுமியுள்ளனர்.
அதேவேளை அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழகங்களை போல ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திலும் மாணவர்கள் வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் ஜோர்ஜ்...
கனடிய விமான சேவையை நிறுவனங்கள் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கூடுதல் எண்ணிக்கையிலான முறைப்பாடு காரணமாக இவ்வாறு முறைப்பாடுகளை பரிசீலனை செய்வதற்கு காலம் தாழ்த்தப்படுவதாக கனடிய போக்குவரத்து ஒழுங்கமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான சேவை நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அல்லது பயணிகளுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் கனடிய போக்குவரத்து முகவர் நிறுவனம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
எவ்வாறெனினும், முறைப்பாடுகள் தொடர்பான...
கனடாவில் சிறிய பணத் தொகை ஒன்றை அனுப்பி வைத்து நூதனமான முறையில் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய வங்கிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
காதல் உறவிலிருந்து பிரிந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்புகளை துண்டித்த பின்னர் இவ்வாறு துஸ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொலைபேசி வழியான தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்டு முடக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு வங்கியில் பணம் அனுப்பும் போர்வையில் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு டொலர்...
கனடாவில் அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் வென்றெடுக்கப்பட்டது.
இந்த லொத்தர் சீட்டினை ஒன்றாரியோயின் லேக்பீல்டைச் சேர்ந்த தம்பதியினர் வென்றெடுத்துள்ளனர்.
லொட்டோ மெக்ஸ் ஜாக்பொட் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.தாங்கள் வாழ்ந்து வந்த அதே கிராமத்தில் வாழ்வதற்கு உத்தேசித்துள்ளதாக டக் மற்றும் எடின் ஹானோன் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டை புனரமைத்து அதே வீட்டில் வசிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.அயலர்கள் மிகவும் நல்லவர்கள் எனவும் இந்த கிராமிய வீட்டை விட்டு செல்லும் எண்ணமில்லை...
வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் காரைநகர் பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் (25) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுளளார்.
கடத்தப்பட்டு கொலை
கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதியில் இருந்து ,வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து...
சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (26.04.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
க.பொ.த சாதாரணதர பரீட்சை
அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை தேர்வு மே இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த...
சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து நாடாளுமன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் நீதி நிலைநாட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சீடர்களே இன்னமும் அதிகாரத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பூரண விசாரணை நடத்தப்படும்
இதன் காரணமாகவே கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...