அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று டிசி-4 என்ற சரக்கு விமானம் புறப்பட்டது.
இந்நிலையில் புறப்பட்டு 11 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஆற்றுங்கரை அருகே விமானம் விழுந்ததில் அதில் தீ பற்றியதில் விமானத்தில் பயணித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை...
வழக்கத்துக்கு மாறாக, குளிர்காலத்தில் உஷ்ணம், அதிகரித்து வரும் வறட்சி மற்றும் எதிர்வரும் மாதங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம் என பல காரணங்களால், மீண்டும் ஒரு பயங்கர அழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சூழலை கனடா எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக பெடரல் அரசு எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள மேற்கு கெலோனா நகரில் வீடுகளை அழித்து பெரும் சேதத்தையும் மக்களுக்கு கடும் மன...
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வளையல் இங்கிலாந்து சிறுவன் ஒருவர் கையில் கிடைத்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளான். அப்போது தரையில் ஒரு வினோதமான பொருள் தட்டுப்பட்டுள்ளது.
கி.பி. 1-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க வளையல்
மங்கிய நிலையில் காணப்பட்ட அந்த பழைய காலத்து வளையலை கொண்டு போய் தனது தாயிடம் கொடுத்தான். அதை வாங்கிய அவனது...
கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து இந்தியாவை சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் உயிர்ழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அனகாபல்லியை சேர்ந்த 20 வயதான தாசரி சந்து என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவ படிப்பை படித்து வரும் தாசரி சந்து தனது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்றார். அப்போது மாணவர் தாசரி சந்து எதிர்பாராதவிதமாக உறைந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்தார்.
சந்துவின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம்...
ரொறன்ரோ வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் சராசரி வீட்டு வாடகைத் தொகை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
rentals.ca என்ற இணைய தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.இந்த மாதத்தில் வாடகைத் தொகையானது கடந்த மாதத்தை விடவும் 0.7 வீதமாக குறைவடைந்துள்ளது.
இதன்படி இந்த மாதத்தில் சராசரி வாடகைத் தொகையானது 2782 டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதலே வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
எவ்வாறெனினும், கனடாவில்...
ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியதும் இறக்கை பகுதியில் இருந்து புகை வெளியேறிய சம்பவம் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விமானம் இன்று சுமார் 200 பயணிகளுடன் ஷின் சித்தோஷ் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து விமானத்தில் இருந்து பயணிகள் அவசரம் அவசரமாக வெளியேறினர். ஆனால் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜப்பான் பொது ஒளிபரப்பு நிறுவனமான...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.69 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.92 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.651 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கனடிய மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கான வீடுகளை நிர்மானிக்கும் திட்டத்திற்கு வரவேற்பு வெளியிடப்பட்ட போதிலும் ஒட்டுமொத்த வரவு செலவுத்திட்டம் குறித்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
லெட்ஜர்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
21 வீதமான மக்கள் மட்டுமே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ளனர்.
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 250 முதல் 300 ரூபா வரை குறைக்கப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 100 முதல் 130 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இராஜவரோதயம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (23-04-2024) இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீதியை கடக்க முற்பட்ட போது வேனுடன் மோதுண்டதில் 15 அடி தூரமளவில் குறித்த மாணவி தூக்கி வீசப்பட்ட நிலையில் இவ் விபத்து இடம் பெற்றமை சிசிரிவி கானொளி மூலம் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பாக கண்டியை சேர்ந்த 32 வயதான வான் சாரதி திருகோணமலை...