கார் பந்தய விபத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடும் காயங்களுக்குள்ளான இருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் பதுளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பான அறிக்கை இதனிடையே, தியத்தலாவ விபத்து தொடர்பான அறிக்கை எதிர்வரும் மே...
  பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு 12.45 அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளாடையுடன் உள்நுழைந்துள்ளார். இதை அவதானித்த அங்கிருந்த முதல் வருட மாணவி ஒருவர் அச்சமடைந்த நிலையில் கூக்குரலிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி...
  யாத்திரை சென்ற நிலையில் மலையில் உச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயிருந்த இளைஞன் மூன்று நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிவனொளிபாத மலை வனப்பகுதிக்கு அருகில் உள்ள நல்லதன்னி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டத்தின் ராஜமலை பகுதியில் இன்று (24) காலை இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டு தோட்ட தொழிலாளர்கள் குழுவினால் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்...
  ஹிங்குராக்கொட பிரதேசத்தில் மீனவர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (24.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மீனவரே உயிரிழந்துள்ளார்.அத்துடன் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  ஜனாதிபதித் தேர்தலின் (Presidential Election) போது ஏராளமான வேட்பாளர்கள் களமிறங்கும் சாத்தியம் காணப்படுவதாக அரசியல் கட்சிகளின் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரை 7 வேட்பாளர்கள், தாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். அதிகூடிய வேட்பாளர்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின்...
  சுதந்திரக்கட்சிக்குள் நிலவும் சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக கட்சி உறுப்பினர்கள் இன்று (25) கொழும்பில் அவசரமாக கூடவுள்ளனர். இன்று (25) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு 10, டீ.பீ.ஜயா மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவசரமாக ஒன்றுக்கூடும் உறுப்பினர்கள் இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...
  வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் இரவு வேளையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி காணாமல்போய் ஒரு மாதத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 26 ஆம் திகதி இரவு காணாமல் போன குறித்த துப்பாக்கி நுககொல்ல பிரதேசத்திலுள்ள வர்த்தக பகுதியொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் துப்பாக்கி அந்த பகுதியில் துப்பாக்கியை கண்ட பெண் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், ஹசலக பொலிஸாரின் உத்தியோகபூர்வ நாயான 'ரோக்கின்' உதவியுடன், துப்பாக்கியை சுற்றியுள்ள...
  வைத்தியசாலைகளில் சில தவறுகள் இடம்பெறுகின்றன. அவற்றை ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதற்கான காரணம் வைத்தியசாலை நிர்வாகம் தமது வைத்தியசாலையில் இடம்பெறும் தவறுகளை இனங்கண்டு அவற்றை சீர் செய்ய வேண்டும் என்பதாகும். யாழ். போதனா வைத்தியசாலையின் அசமந்த போக்குகளை செய்தியாக வெளியிட்டு தனது ஊடகக் கடமையைச் செய்த ‘தமிழ்வின்’ இணையத்தளத்தை ‘நிராகரிக்க வேண்டும்’ என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்திருந்தார். வைத்தியரின் பதிவு இந்த விடயம் தொடர்பான அவரின்...
  போட்டி பரீட்சையின்றி வேலை வாங்கி தருவதாகக் கூறி 500 இளைஞர்களிடம் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவை தென்னிலங்கையின் பலமான அரசியல்வாதி ஒருவர் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் இதுவரை எவரும் அனுப்பப்படவில்லை எனவும் இளைஞர்கள் குழு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தின் ஊடாக போட்டி பரீட்சையின்றி கொரியாவில் வேலை வாங்கி தருவதாக குறித்த இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தென்னிலங்கை அந்த அரசியல்வாதி, 500 இளைஞர்களிடம் இருந்து தலா 40,000 ரூபா பணம்...
  கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அதன்படி, 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி...