வைத்தியசாலைகளில் சில தவறுகள் இடம்பெறுகின்றன. அவற்றை ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதற்கான காரணம் வைத்தியசாலை நிர்வாகம் தமது வைத்தியசாலையில் இடம்பெறும் தவறுகளை இனங்கண்டு அவற்றை சீர் செய்ய வேண்டும் என்பதாகும்.
யாழ். போதனா வைத்தியசாலையின் அசமந்த போக்குகளை செய்தியாக வெளியிட்டு தனது ஊடகக் கடமையைச் செய்த ‘தமிழ்வின்’ இணையத்தளத்தை ‘நிராகரிக்க வேண்டும்’ என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்திருந்தார்.
வைத்தியரின் பதிவு
இந்த விடயம் தொடர்பான அவரின்...
போட்டி பரீட்சையின்றி வேலை வாங்கி தருவதாகக் கூறி 500 இளைஞர்களிடம் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவை தென்னிலங்கையின் பலமான அரசியல்வாதி ஒருவர் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் இதுவரை எவரும் அனுப்பப்படவில்லை எனவும் இளைஞர்கள் குழு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்கத்தின் ஊடாக போட்டி பரீட்சையின்றி கொரியாவில் வேலை வாங்கி தருவதாக குறித்த இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தென்னிலங்கை அந்த அரசியல்வாதி, 500 இளைஞர்களிடம் இருந்து தலா 40,000 ரூபா பணம்...
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்
அதன்படி, 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை என அமைச்சர் மனுச நாணயக்கார அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு இது தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிடைத்துள்ள முறைப்பாடு
அவர் மேலும் தெரிவிக்கையில், அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை...
ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார காலமானார்.
திடீர் சுகவீனம் காரணமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாத்தளை விஞ்ஞானக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பேராதனை மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
ரயில்வே தலைமைப் பொறியாளர் (வீதிகள் மற்றும் தொழில்கள்) மற்றும் மேலதிக பொது முகாமையாளர் (உள்கட்டமைப்பு) உள்ளிட்ட பல உயர் பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.
போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மையில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் கைதான சந்தேக நபர் ஒருவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் துரித விசாரணை...
தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூரைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கையின் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீற்றர் தூரம் பாக் ஜலசந்தி கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல நீச்சல் வீரர்கள் நீந்திக் கடந்து சாதனை படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தலைமன்னார் முதல்...
குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பத்து கிலோ அரிசியை பெற்றுக்கொள்வதற்காக ஒருவரிடமிருந்து நூறு ரூபா அறவிடப்படுவதாக திம்புலாகல மானம்பிட்டிய பிரதேசத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மானம்பிட்டிய கிராம சேவகர் அலுவலகத்தில் இன்று (22) குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான பத்து கிலோ இலவச அரிசி விநியோகம் இடம்பெற்றது.
நூறு ரூபாய் அறவீடு
பத்து கிலோ அரிசி வழங்க வேண்டுமாயின் நூறு ரூபாயை கொண்டு வருமாறு கிராம சங்க உறுப்பினர்கள் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அறிவித்துள்ளனர்.
அத்துடன் அரிசி பெறவரும் போது...
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் நடைமுறையில் சாத்தியமற்ற திட்டங்களை செயல்படுத்துவதாக சுதந்திர மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலகிலுள்ள எந்தவொரு நாடும் இவ்வாறான திட்டங்களை இதுவரை நடைமுறைப்படுத்தியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் இந்த நிலை தொடர்பில் தான் கவலையடைவதாக இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஜி.எல். பீரிஸ் கூறியுள்ளார்.
இலங்கையின் கடன்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் ”இலங்கை 27 பில்லியன் டொலர்களை...
கால்நடைகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையை கட்டாயமாக்குமாறு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகின்றமையை கருத்திற்கொண்டு ஆளுநர் இதனை தெரிவித்தார்.
பதிவு செய்வது கட்டாயம்
கால்நடைகளை வளர்ப்போர் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் எனவும், வெளிமாவட்டங்களுக்கு கால் நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கும் போது உரிய சட்ட விதிகளை...