சினிமாவில் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரைக்கு மக்கள் பேராதரவு இப்போதெல்லாம் கொடுக்கிறார்கள். வீட்டுப் பெண்களை தாண்டி இளைஞர்களும் அவர்களுக்கு பிடித்த தொடர்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் எல்லா தொலைக்காட்சிகளிலுமே புத்தம் புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அப்படி சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி. இதில் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் திரைப்படம் மட்டும் ஒளிபரப்பாக மற்ற...
  அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பகுதியில் மெக்டொனால்டு உணவகத்தில் பணியாற்றிய 15 வயது பெண் ஊழியரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார். அங்கு வந்த ரெளடிகள் சிலர் ஊழியர்களிடம் தகராறு செய்த நிலையில், ஆரியா லைன்ச் என்ற சிறுமியை ஜானி ரிக்ஸ் என்பவர் முடியை பிடித்து இழுத்து தரையில் மோதியுள்ளனர். இதில் சிறுமியின் மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செயத பொலிஸார் மேலதிக விசாரணைகளை...
  சிசேரியன் மூலம் பிரசவித்த தனது மருமகளை, அடுக்கு மாடி குடியிருப்பின் லிஃப்ட் பழுதடைந்ததால் மாமியார் கிரேனில் தூக்கிச் சென்ற சம்பவம் பருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் லியோனிங் மாகாணத்தின் ஷென்யாங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்தில் வாங் (Wang) எனும் பெண்மணி தன் மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். மருமகள் படிக்கட்டுகளில் ஏற சிரமப்படுவார் இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிறைமாத கர்ப்பிணியான வாங்கின் மருமகளுக்கு, மார்ச் மாத இறுதியில்...
  தைவான் - கிழக்குப் பகுதியில் 9 நிமிடங்களுக்குள் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் ஹுவாலியன் கவுண்டியில் உள்ள ஷோஃபெங் டவுன்ஷிப்பில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, 2 வாரங்களுக்கு முன்பு, ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் தைவானின் கிழக்குக் கரையை உலுக்கியது. இதில் 04 பேர் உயிரிழந்ததுடன் 700 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனையடுத்து தற்போது 05 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன
  இந்திய மாணவர்கள் பயணித்துக்கொண்டிருந்த கார் மீது எதிர் திசையில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இரு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் கடந்த 20-04-2024 திகதி இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் இந்தியா - தெலுங்கானாவை சேர்ந்த 19 வயதான முக்கா நிவேஷ் மற்றும் கவுதம் பார்சி என்ற மாணவர்களே உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவுக்கான பொறியியல் படிப்பை படித்து வந்துள்ளனர். இந்த...
  கியூபாவில் உயிரிழந்த கனடியர் ஒருவரின் சடலம் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டதனால் குடும்பத்தினர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. விடுமுறையைக் கழிப்பதற்காக மொன்றியாலைச் சேர்ந்த ஒருவர் கியூபா சென்றிருந்த போது அங்கு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபரின் சடலத்திற்கு பதிலாக வேறும் ஒருவரின் சடலத்தை கியூப அதிகாரிகள், கனடாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். தனது தந்தையின் சடலத்தை பெற்றுக்கொள்வதற்கு கனடிய அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இறுதிக் கிரியை பாராஜ் அல்லாஹ்...
  இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது ஒரே நாளில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 250 பேரை பணய கைதிகளாக அவர்கள் கடத்திச் சென்றனர். இவ்வாறான நிலையிலேயே காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்துவருகின்றது. கடந்த சில நாட்களாக இஸ்ரேல், காசா மீதான...
  கனடாவின் பொதுப் போக்குவரத்துத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ரி.ரீ.சீ போக்குவரத்து சேவையின் தொடர்பாடல், இலத்திரனியல் மற்றும் சமிக்ஞை பணியாளர்கள் இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். சுமார் 650 பணியாளர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை நள்ளிரவுடன் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதல்...
  சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் டிக்டொக் நிறுவனத்திடம் கோரியுள்ளது. குறித்த அறிக்கையினை வழங்குவதற்கு டிக்டொக் நிறுவனம் தவறும் பட்சத்தில், டிக்டொக் செயலிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், காணொளிகளை பார்ப்பதற்காக பயனர்களுக்கு பணம் செலுத்தும் புதிய செயலி குறித்த மேலதிக தகவல்களை வழங்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. டிக்டொக் செயலியை பயன்படுத்துவதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. பாதுகாப்பு...
  மலேசிய கடற்படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி பத்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகொப்டர்களில் பயணம் செய்த அனைவரும் குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலேசியக் கடற்படையின் 90-ஆம் ஆண்டு நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இந்த விபத்து ஏற்பட்டது. இன்று (2024.04.23) காலை 9 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த இரு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்களில் ஓர் இந்தியரும் அடங்குவதாக தெரியவருகின்றது. HOM மற்றும் FENNEC...