சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் டிக்டொக் நிறுவனத்திடம் கோரியுள்ளது. குறித்த அறிக்கையினை வழங்குவதற்கு டிக்டொக் நிறுவனம் தவறும் பட்சத்தில், டிக்டொக் செயலிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், காணொளிகளை பார்ப்பதற்காக பயனர்களுக்கு பணம் செலுத்தும் புதிய செயலி குறித்த மேலதிக தகவல்களை வழங்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. டிக்டொக் செயலியை பயன்படுத்துவதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. பாதுகாப்பு...
  மலேசிய கடற்படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி பத்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகொப்டர்களில் பயணம் செய்த அனைவரும் குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலேசியக் கடற்படையின் 90-ஆம் ஆண்டு நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இந்த விபத்து ஏற்பட்டது. இன்று (2024.04.23) காலை 9 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த இரு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்களில் ஓர் இந்தியரும் அடங்குவதாக தெரியவருகின்றது. HOM மற்றும் FENNEC...
  ஊடகவியலாளர் ஒருவரின் நடவடிகைக்கு எதிராக ஒட்டுசுட்டான் பிரதெச செயலக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் ஊழியர் நலப்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் பிரதே செயலத்திற்கு முன்பாக நேற்று (22.04.2024) திரண்ட பிரதேச செயகல ஊழியர்கள் அனைவரும் கவனயீர்ப்பினை வெளிக்கொண்டுவந்துள்ளார்கள். ஊடக தர்மத்தினை தனிநபரின் சுயலாபத்திற்கு பயன்படுத்துவதா,கௌரவமான அரச சேவையினை இழிவுபடுத்துவதா,ஊடக தர்மத்தை இழிவு படுத்தாதே,நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்தியமை பிரதேச செயலகத்தின் தவறா? பொதுமக்கள் சேவையினை தனி...
  நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(22.04.2024) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி வேலை திட்டங்கள் நெடுந்தீவு பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலை திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய நிலையில் மதுபான விற்பனை நிலையத்தை கொண்டு வருவதால் இளம் சந்ததியினர் வழி தவறிப் போகக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு பிரதேச மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள்,...
  போதனா வைத்தியசாலையின்(Jaffna teaching hospital) அசமந்த போக்கு தொடர்பில் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் (22) ஒருவர் இறந்த நிலையில் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மீண்டும் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கருங்காலி, காரைநகர் பகுதியில் வசித்து வந்த 71 வயதுடைய சின்னையா என்பவரது சடலமே மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணை குறித்த நபர் கடந்த மார்ச் மாதம் 26...
  மொரகஹஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்றிரவு இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொரு நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
  யாழ். போதனா வைத்தியசாலைக்கு (Jaffna teaching hospital) இடமாற்றம் செய்யப்பட்ட கர்ப்பிணி தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெளிவுபடுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அண்மையில் மேற்படி விடயம் சம்பந்தமாக பல ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் உண்மைக்கு புறம்பான செய்தி...
  ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பு இன்று (23) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது எனத் தெரியவருகின்றது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பின்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையிலேயே மொட்டுக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் பற்றி முடிவெடுக்கப்படும் எனத் தெரியவருகின்றது. இதற்கு முன்னரும் ரணிலுக்கும் பசிலுக்கும் இடையில் இரு சந்திப்புகள் நடைபெற்றன. மூன்றாம் கட்ட சந்திப்பு இதன்போது ஜனாதிபதித்...
  பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 650 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 1 கோடியே 14 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் 2 பெண்களும் அடங்குவதாகவும், அவர்கள் நீர்கொழும்பு மற்றும் கட்டான பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை ஏனைய 3 சந்தேகநபர்களும் கொழும்பு மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக்...
  எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்தியில் நிலவி வரும் பதற்ற நிலை தணிந்தால், விலை குறையும் சாத்தியம் உண்டு என தெரிவித்துள்ளார். இவ்வாறு சர்வதேச சந்தையில் விலை குறைவடைந்தால் அந்த நலன்களை நாட்டு மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.