ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பு இன்று (23) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது எனத் தெரியவருகின்றது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பின்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையிலேயே மொட்டுக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் பற்றி முடிவெடுக்கப்படும் எனத் தெரியவருகின்றது. இதற்கு முன்னரும் ரணிலுக்கும் பசிலுக்கும் இடையில் இரு சந்திப்புகள் நடைபெற்றன. மூன்றாம் கட்ட சந்திப்பு இதன்போது ஜனாதிபதித்...
  பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 650 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 1 கோடியே 14 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் 2 பெண்களும் அடங்குவதாகவும், அவர்கள் நீர்கொழும்பு மற்றும் கட்டான பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை ஏனைய 3 சந்தேகநபர்களும் கொழும்பு மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக்...
  எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்தியில் நிலவி வரும் பதற்ற நிலை தணிந்தால், விலை குறையும் சாத்தியம் உண்டு என தெரிவித்துள்ளார். இவ்வாறு சர்வதேச சந்தையில் விலை குறைவடைந்தால் அந்த நலன்களை நாட்டு மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
  அரிசி விநியோகத் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பத்து கிலோ அரிசியை வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து நூறு ரூபா அறவிடப்பட்ட சம்பவம் திம்புலாகல மானம்பிட்டிய கிராம சேவகர் அலுவலகத்தில் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான அரிசி விநியோகம் நேற்று (22) இடம்பெற்றுள்ளது. சட்ட நடவடிக்கை இதன்போது பத்து கிலோ அரிசி வழங்க வேண்டுமாயின் நூறு ரூபாயை கொண்டு வருமாறும் தொகையைக் கொடுக்கத் தவறியவர்களுக்கு அரிசி கிடைக்காது எனவும் கிராம...
  இளம் பெண் ஒருவரை திருமணம் செய்ய முயன்ற இந்திய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். வாத்துகாம பகுதியை சேர்ந்த ஆசிரியையாக பணியாற்றும் இளம் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற 26 வயதான இளைஞனை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞன் தன்னை ஊடகவியலாளராகவும் மற்றும் திரைப்பட நடிகராகவும் அறிமுகம் செய்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற இளைஞன், திருமணம் செய்ய விரும்பம் தெரிவித்துள்ளனார். எனினும் பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். திருமணம் செய்ய...
  பிரமிட் திட்டங்களில் ஈடுபடும் மேலும் எட்டு நிதி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்றைய தினம் (22.04.2024) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கிக்கு கிடைத்த முறைப்பாடுகளின்படி, 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 83(c) பிரிவை மீறி தடை செய்யப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தண்டனைக்குரிய குற்றம் விசாரணை அறிக்கைகளின்படி, எட்டு வங்கிச் சட்டத்தின் பிரிவு 83(c)ஐ மீறி நிறுவனங்கள்...
  தேராவில் குளம் நிரம்பி மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள வீடுகள் சுமார் நான்கு மாதங்களாக வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த தாயொருவர் உயிரிழந்த தனது மகனின் மரணச்சடங்கை வீட்டில் செய்ய முடியாது தவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாக தேராவில் குளத்தின் மேலதிக நீரால் அப்பகுதி வீடுகள் நிரம்பியிருக்கும் நிலையில்...
  ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களின் தேசிய பட்டியல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாக ஜே.வி.பி உறுதியளித்துள்ளதை விட கேலிக்கூத்து ஒன்றும் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கத்தோலிக்க மக்களை கொன்று குவித்த ஜே.வி.பிக்கு இம்முறை கத்தோலிக்க வாக்குகள் கிடைக்கும் என நம்ப முடியாது என அமைச்சர் தெரிவித்தார். களனியில் நேற்று (21) இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரிசி வழங்கும் வைபவம் ஒன்றின் பின்னர்...
  பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை தாக்க இ.தொ.க உப தலைவர் செல்லமுத்துவின் அடியாட்கள் தாக்க முயற்சித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று (21) காலை நடைப்பெற்றது. அந்நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரும் கலந்துகொண்டிருந்தார். அந்நிகழ்வின் பின்னர் தனது அடுத்த நிகழ்விற்காக சென்றிருந்த வேலுகுமாரை இ.தொ.க.வின் உப தலைவர் செல்லமுத்து உட்பட...
  நாட்டையே உலுக்கிய தியத்தலாவ பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது நேற்று (21) இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் இரு கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு வாகன சாரதிகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.