தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அழகிய தமிழ் மகன். இப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். முதல் முறையாக இப்படத்தில் தான் விஜய் இரட்டை வேடத்தில்...
  90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகர்களின் ஒருவர் அப்பாஸ். இவர் 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அப்பாஸ் சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் கூட நடித்து வந்தார். இவர் கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த பச்சக்கள்ளம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். 1997ஆம் ஆண்டு எரும் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த...
  அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் உள்ள ஆரஞ்சு மலையில் விருந்து நிகழ்ச்சியின் போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், விசாரணை இந்த விருந்து நிகழ்ச்சியில் சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளதுடன் அப்போது திடீரென துப்பாக்கிச்சூடு நடந்ததில் விருந்து நிகழ்ச்சியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.துப்பாக்கிச்சூட்டில் பலர் கீழே விழுந்தனர். போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு...
  ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே பசிபிக் பெருங்கடலில் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதி நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காணமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ஜப்பான் கடற்படையைச் சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதுடன் அதில் தலா 4 பேர் பயணம் செய்தனர். டோக்கியோவில் இருந்து 600 கிலோமீட்டர் தெற்கே உள்ள டோரிஷிமா தீவு அருகே இரண்டு ஹெலிகாப்டர்களும் திடீரென தொடர்பை இழந்தன. இதையடுத்து,...
  அமெரிக்காவிலிருந்து ரொறன்ரோ நோக்கிப் பயணித்த விமானமொன்றின் கட்டுப்பாட்டு அறையில் மர்ம நபர் ஒருவர் பிரவேசித்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யுனைடட் எயர்லைன் விமான சேவை நிறுவன விமானமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அனுமதி இல்லாத நபர் ஒருவர் விமான கட்டுப்பாட்டு அறைக்குள் பிரவேசித்தமை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. அனுமதி இல்லாத ஒருவர் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் பிரவேசிக்கும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. விமான பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியுள்ளதாக...
  சீனாவின் சில முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கி வருவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. வெள்ளம், மழை, கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறாக சீனாவின் சில முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சீனாவில் இந்த நிலை தொடர்ந்தால், பல மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள 45 நகர்ப்புற நிலப்பரப்பில் ஆண்டிற்கு 3 மில்லிமீட்டர்...
  காசாவின் நாசர் மருத்துவ கட்டிட தொகுதியில் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்ட 50க்கும் அதிகமானவர்களின் உடல்களை மீட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் உடல்களே மீட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாசர் மருத்துவமனையின்கொல்லைப்புறத்தில் இந்த உடல்களை மீட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாசர் மருத்துவ கட்டிட தொகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் புதைத்த புதைகுழிகள் காணப்படுகின்றன நேற்று 50க்கும் மேற்பட்ட தியாகிகளின் உடல்களை பார்த்து அதிர்ச்சியடைந்தோம் என சிவில்...
  கனடாவில் கப்பல் விபத்தில் சிக்கி இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் நியூபவுண்ட்லாண்ட் பகுதி கடலில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மீன்பிடிக் கப்பல் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. கப்பலில் பயணம் செய்த மேலும் நான்கு பேர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். நீரில் மூழ்கியவர்கள் மீட்கப்பட்டு, விமானம் மூலம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
  கனடிய வரி முகவர் நிறுவனம், மோசடியாளர்களுக்கு பணம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. வரி மோசடியாளர்களுக்கு இவ்வாறு 37 மில்லியன் டொலர் பணம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரகசிய ஆவணமொன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கோல்ட் லைன் என்ற தொலைதொடர்பு நிறுவனம் தொடர்பில் இவ்வாறு சர்ச்சை எழுந்துள்ளது.மோசடியான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் வரி மீளளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய வரி முகவர் நிறுவனம் உரிய முறையில் கவனம் செலுத்தாது வரி மீளளிப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போலி...
  ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதலை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக ஈராக்கில் உள்ள ஆயுதகுழுவொன்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியாவின் வடகிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளமொன்றின் மீது ஈராக்கின் ஜூமார் நகரிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கார்டியன் தெரிவித்துள்ளது. பெப்ரவரிக்கு பின்னர் முதல்தடவையாக தாக்குதல் இடம்பெற்றுள்ளது.பெப்ரவரி மாதத்தில் ஈராக் குழுக்கள் அமெரிக்க தளங்களின் மீது தாக்குதல்களை நிறுத்தியிருந்தன. ஈராக்கிய பிரதமர் அமெரிக்காவிற்கு மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலளாரை சந்தித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த...