தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை உடனடியாக மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) ஜனாதிபதியிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊவா பரணகம, அம்பகஸ்தோவ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பு தொடர்ந்து கருத்துரைத்த அவர், “நாடு அசாதாரணமான சூழ்நிலையில் இருந்த போது தைரியமாக நாட்டை மீட்டெடுக்க முன்வந்த தலைவர் என்ற...
  செனன் தோட்டப்பகுதியில் அமைந்திருந்த தேயிலைத் தொழிற்சாலையொன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீ விபத்தானது நேற்று (21.04.2024) மாலை 3.30 மணியளவில் திடீரென ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் தீப்பரவலை தொழிலாளர்கள், ஹட்டன் - டிக்கோயா தீயணைப்பு படை மற்றும் பொலிஸார் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர். தேயிலைத் தொழிற்சாலையில் உள்ள அடுப்பில் ஏற்பட்ட அதிக சுவாலை காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர். இத்தீப்பரவல் காரணமாக தொழிற்சாலைக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில்...
  பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. விண்ணபிப்பதற்கான இறுதி நாளாக கடந்த 31 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆட்பதிவு திணைக்களம் எனினும் பிரதேச செயலாளர்களின் வேண்டுகோளுக்கு...
  வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (21.4.2024) காலை ரஜஎல வீதியின் கிளை வீதியில் இடம்பெற்றுள்ளது. கந்தளாய் - ரஜஎல பிரதேசத்தில் வசித்து வந்த 19 வயதுடைய யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய, வருகையில், கிளை வீதியில் பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி யுவதி மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த யுவதி கந்தளாய் வைத்தியசாலையில்...
  பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் தமது கட்சி இன்னமும் எதுவித தீர்மானமும் எடுக்கவில்லை என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி உப தலைவி தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட மண்முனை தென் மேற்கு பிரதேசக் கிளையின் மகளிர் அணி நிர்வாகத் தெரிவு பட்டிப்பளையில் இடம்பெற்றுள்ளது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் மேலும் தெரிவிக்கையில், பொது வேட்பாளர்...
  ஏழு உயிர்களை காவு கொண்ட தியத்தலாவை Fox Hill கார் பந்தயம் பாதுகாப்பான முறையில் நடத்தப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தற்போது பகிரபட்டு வரும் செய்தியொன்று மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள ஓட்டப் பந்தயங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட Fox Hill கார் ஓட்டப் பந்தயம் 5 வருடங்களின் பின்னர் இந்த வருடம் நடத்தப்பட்டுள்ளது. விபத்து தியத்தலாவை -...
  போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடுமையான சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கை நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, யுக்திய நடவடிக்கையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அடுத்த மாதத்திற்குள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் புத்தளம் மாவட்டத்தில் அதற்கான விசேட இடம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர்...
  பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை (Trincomalee) சாஹிரா கல்லூரி மாணவிகளுக்கு கொழும்பில் நடைபெற இருந்த விசாரணை திருகோணமலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில், திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (Member of Parliament) இம்ரான் மஹ்ரூப் (Imran Mahroob) பரீட்சை ஆணையாளருக்கு (Commissioner of Examinations) நன்றி தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மாணவிகளின் கொழும்பு விசாரணை இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70...
  ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக செலவினங்கள் வெளியிடப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செலவுகள் தொடர்பான விடயம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை ஜனாதிபதி பங்கேற்ற வெளிநாட்டு பயணங்கள், ஒவ்வொரு பயணத்திலும் சந்தித்த வெளிநாட்டு தலைவர்கள் தொடர்பில் தனித்தனியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணங்கள் அந்த அரச தலைவர்களுடன் இராஜதந்திர ரீதியில் செய்துள்ள உடன்படிக்கைகள் மற்றும் அந்த உடன்படிக்கைகளில் எட்டப்பட்ட விடயம் குறித்தும்...
  போலி இணையத்தளங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல (Charuka Damunupola) தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்தின் இணையத்திற்கு இணையாக காணப்படும் இவ்வாறான போலி இணையத்தளங்களை நீக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போலி இணையத்தளங்கள் நீக்கம் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான 5 போலி இணையத்தளங்களை இணையத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளங்களை பயன்படுத்தி 35 பண மோசடி சம்பவங்கள்...