ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) அவரது கூட்டாளிகளை கண்டிக்குமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி (Kandy) - புஸ்ஸல்லாவையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நேற்று (22.04.2024) அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் கூறுகையில், "இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்டுக்கடங்காத குண்டர்கள், மூத்த துணைத் தலைவர் செல்லமுத்து மற்றும் அவரது மகன்கள்...
  தொடருந்து பராமரிப்பு பணிகளுக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardane) கவலை வெளியிட்டுள்ளார். தொடருந்து சேவை தொடர்ச்சியாக நட்டத்தை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டம் "சமீபத்தில், பேருந்துகள் இல்லாத சாலைகளில் குழந்தைகள் பாடசாலைக்கும் மருத்துவமனைக்கும் செல்ல இந்திய கடன் திட்டத்தின் கீழ் 500 பேருந்துகள் வழங்கப்பட்டிருந்தது. கடன் வாங்காவிட்டால், அரசாங்கத்தினால்...
  Fox Hill கார் பந்தயத்தின் போது நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 19 பேர் காயமடைந்து தியத்தலாவை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. விபத்தில் 4 போட்டிக் கண்காணிப்பாளர்கள், மூன்று பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளனர். கோர விபத்து விபத்தில் உயிரிழந்தவர்களில் வெலிமடை மற்றும் டயரபவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் 55 வயதுடையவர் என்பதுடன்...
  ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பலர் வேறும் இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டு வாடகைப் பிரச்சினையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை மூவாயிரம் டொலர்களாகும். இவ்வாறான ஓர் பின்னணியில் நகரை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 60 வீதமான வாடகைக் குடியிருப்பாளர்கள் எத்தனித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில்...
  ஈரான் மீது இஸ்ரேல் இன்றையதினம் ஏவுகணைகளை வீசி பதில் தாக்குதல் நடத்தியிருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து சத்தம் கேட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், எதிரிகளின் ஆயுதங்கள் மற்றும் விமானங்களை கண்டறிந்து பதில் ஏவுகணைகளை வீசி அழிக்கும் வான் பாதுகாப்பு சாதனங்களை ஈரான் பயன்படுத்த தொடங்கியுள்ளது. இன்றையதினம் அதிகாலையில்...
  கனடாவில் தொழில் மோசடியில் சிக்கிய இந்திய பெண் ஒருவர் பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார். அண்மையில் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு வந்த பெண் ஒருவரே இவ்வாறு மோசடியில் சிக்கியுள்ளார். ரொறன்ரோவைச் சேர்ந்த தேவான்சி பொட்டார் என்ற பெண் 15000 டொலர்களை இழந்துள்ளார்.இது ஓர் சிறிய தொகை கிடையாது எனவும், தனது வாழ் நாள் சேமிப்பு எனவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு கனடாவிற்குள் குடியேறிய தேவான்சி தொழில் வாய்ப்பு ஒன்றிற்காக காத்திருந்தார் . இன்ஸ்டாகிராமில்...
  ஒன்றாரியோவில் சம்பள அதிகரிப்பிற்காக உதவி ஆசிரியர்கள் தொடர்ந்தும் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ பதிவு செய்யப்பட்ட சிறுவர் பராய உதவி ஆசிரியர்களே இவ்வாறு சம்பள அதிகரிப்பிற்காக காத்திருக்கின்றனர். மாகாண அரசாங்கம் சம்பளங்களை அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. எனினும், இதுவரையில் சம்பளங்கள் அதிகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் முதுல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் சம்பள அதிகரிப்பு வழங்குவதாக உறுதிமொழி வழங்கியிருந்தது. மணித்தியாலமொன்றிற்கான சம்பளத்தை சுமார் 23.86 டொலர்களாக உயர்த்துவதற்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் இதுவரையில்...
  லண்டனில் இந்திய மாணவர்கள் இருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயரில் ஆறுகள் சங்கமிக்கும் வனப்பகுதியான லின் ஆப் டம்மெல் என்ற இடத்திற்கு நேற்று முன்தினம் மாலை, சிலர் உல்லாச பயணம் மேற்கொண்டனர். அங்கு சென்றதும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது, இந்தியாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் திடீரென தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் இரண்டு மாணவர்களையும் சடலமாக மீட்டனர். அவர்களின்...
  கென்யாவில் ஹெலிகாப்டர் வெடித்துச்சிதறியதில் அந்நாட்டு ராணுவ தளபதி பிரான்சிஸ் ஓகொல்லா உள்பட 11 ராணுவ வீரர்கள் பலியாகினர். கென்யாவின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பதற்றமான பகுதியை கண்காணிக்க ராணுவ தளபதி உள்பட பலர் ஹெலிகாப்டரில் சென்றனர். ஆனால் அந்த ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்து சிதறியது. இதில் மூத்த ராணுவ தளபதி பிரான்சிஸ்...
  வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் கடந்த 17 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தது. சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தை காரணம் இந்நிலையில் நேற்றைய தினம் இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம...