கென்யாவில் ஹெலிகாப்டர் வெடித்துச்சிதறியதில் அந்நாட்டு ராணுவ தளபதி பிரான்சிஸ் ஓகொல்லா உள்பட 11 ராணுவ வீரர்கள் பலியாகினர். கென்யாவின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பதற்றமான பகுதியை கண்காணிக்க ராணுவ தளபதி உள்பட பலர் ஹெலிகாப்டரில் சென்றனர். ஆனால் அந்த ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்து சிதறியது. இதில் மூத்த ராணுவ தளபதி பிரான்சிஸ்...
  வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் கடந்த 17 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தது. சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தை காரணம் இந்நிலையில் நேற்றைய தினம் இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம...
  முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக...
  கிளிநொச்சி மேல் நீதிமன்ற புதிய நீதிபதியாக A.G அலெக்ஸ்ராஜா பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளார் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தின் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி A. M. M சஹாப்தீன் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்று செல்லவுள்ளார். இதனடிப்படையிலேயே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சிவில் நிர்வாக கட்டமைப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேற்றத்தின் பின்னர் சிவில் நிர்வாக கட்டமைப்புகள்...
  அனுமதி இன்றி பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு 782 வழித்தட அனுமதியை இலங்கை போக்குவரத்து சபையினர் வழங்கியதாக காரைநகர் தனியார் போக்குவரத்து பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து நேற்றையதினம் கவனயீர்ப்பில் ஈடுபட்ட சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் 32 ஆண்டுகளாக இந்த சங்கத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டு வருகின்றோம். எமது வழித்தட பகுதிக்குள் இல்லாத ஒருவருக்கு வழித்தட அனுமதி வழங்கக் கூடாது என்று எமது யாப்பில் உள்ளது. வழித்தட அனுமதி இது...
  பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும அவர்களின் இறுதி பயணம் இலட்ச கணக்கான மக்களின் பங்குபற்றலுடன் நேற்று நடைபெற்றது. இலங்கையின் சமகால வரலாற்றில் பெருந்தொகை மக்களின் பங்கேற்புடன் அரசியல்வாதி ஒருவருக்கு நடைபெற்ற இறுதி நிகழ்வாக இது கருதப்படுகிறது. முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் அரச மரியாதையுடன் நடைபெற்றது. மக்கள் வெள்ளம் நேற்றுமுன்தினம் இரவு மத்துகம யடதோலவத்தையில் உள்ள இல்லத்திற்கு மக்களின் கண்ணீருக்கு மத்தியில் பூதவுடல் கொண்டுவரப்பட்டது. அரசியல் தலைவரின் இந்த திடீர்...
  விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் இராணுவ வீரர்களுக்கு இன்று (20) முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என இராணுவம் தெரிவித்துள்ளது. வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு இதன்படி, இந்தக் காலப்பகுதியில் தாங்கள் சேர்ந்த படைப்பிரிவு மையத்தை தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டையின் நகல், தேசிய அடையாள அட்டை அல்லது...
  அபிவிருத்தி அதிகாரிகள் குழுவினால் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சையை 2023 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் சேவை அதன்படி, 2023 மார்ச் 23ஆம் திகதி போட்டி பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால...
  ஹொரண பிரதேசத்தில் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற திருடர்களை சிறுவன் ஒருவர் துணிகரமாக செயற்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளார். திருடர்கள் மீது சைக்கிளை வீசிய 16 வயதுடைய பாடசாலை மாணவனின் துணிச்சலான செயற்பாட்டினால் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்களிடம் இரண்டு தங்க சங்கிலிகள் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தங்க நகை திருட்டு கடந்த 16ஆம் திகதி மதியம் ஹொரணை வாவல கந்தரவத்தை வீதியில் பழக்கடை நடத்தி...
  13 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பமான சம்பவம் வைத்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் பொலிஸார் நேற்று விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பல நாட்களாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமி குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். மருத்துவ பரிசோதனை மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அது...