ஹொரண பிரதேசத்தில் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற திருடர்களை சிறுவன் ஒருவர் துணிகரமாக செயற்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளார்.
திருடர்கள் மீது சைக்கிளை வீசிய 16 வயதுடைய பாடசாலை மாணவனின் துணிச்சலான செயற்பாட்டினால் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்களிடம் இரண்டு தங்க சங்கிலிகள் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தங்க நகை திருட்டு
கடந்த 16ஆம் திகதி மதியம் ஹொரணை வாவல கந்தரவத்தை வீதியில் பழக்கடை நடத்தி...
13 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பமான சம்பவம் வைத்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் பொலிஸார் நேற்று விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பல நாட்களாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமி குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனை
மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அது...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனம் புறக்கணித்தமை மற்றும் வேதன உயர்வு வழங்காமை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல்...
எமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் களுத்துறை மற்றும் அளுத்கடை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை மோசமாக நடத்துவது மற்றும் உணவுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற இரண்டு சம்பவங்கள் குறித்து சமீபத்தில் வெளியான இரண்டு சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்கும் வகையில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
சில நபர்கள் இதுபோன்ற அநாகரீகமான நடத்தையில்...
மின்சாரத்துறை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்தில் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டமூல வரைவு
ஜனவரி மாதம் பங்குதாரர்களால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள், திருத்தப்பட்ட சட்டமூல வரைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, இந்த...
சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பான வழக்கு இன்று(18) நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்த...
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பான தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எழுத்து மூலம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேசிய மக்கள் சக்தி தமக்கு இதுவரை எழுத்துபூர்வமாக எதுவும் வழங்கவில்லை எனவும், ஆனால் ஏதோ வாய்மொழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எழுத்து மூலம் உறுதி மொழி தரப்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்துமூல உத்தரவாதம்
எதிர்காலத்தில் தம்மைச் சந்திப்பதற்கு...
குமார் சங்கக்காரா என்னிடம் கூறியது, தோனி மற்றும் கோலியைப்போல் செய்தேன்! 55 பந்தில் சதம் விளாசிய பட்லர்
Thinappuyal News -
தோனி, கோலி கடைசிவரை வெற்றி பெறுவோம் என நம்புவதுபோல் நானும் அதை முயற்சித்தேன் என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
அதிரடி சதம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
ஒரு கட்டத்தில் 125 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாறியபோது, அணியை தூக்கி நிறுத்திய ஜோஸ் பட்லர், அதிரடி சதம்...
ஐபிஎல் 2024யின் 32வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
89 ஓட்டங்களுக்கு சுருண்ட குஜராத் டைட்டன்ஸ்
அகமதாபத்தில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் மற்றும் ஸ்டப்ஸின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ரஷீத் கான் (31) மட்டும் ஒருபுறம் போராட ஏனைய...
ஷங்கர் மகள் திருமணத்தில் அட்லீ இந்த வேலையெல்லாம் பார்த்தாரா.. குருவுக்காக இப்படியா
Thinappuyal News -
இயக்குனர் ஷங்கர் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் இரண்டாம் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்திற்கு இந்திய திரையுலகில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
ரஜினிகாந்த், கமல் ஹாசன், அட்லீ, நயன்தாரா, ரன்வீர் சிங், காஜல் அகர்வால், லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி, மோகன்லால் என நட்சத்திர பட்டாளமே ஷங்கர் வீட்டு திருமணத்தில் தான் இருந்தார்கள்.
அட்லீ செய்த வேலை
இதில் ஒருவர் மட்டும் சினிமா நட்சத்திரமாக இல்லாமல், ஷங்கர் வீட்டில் ஒருவராக திருமணம்...