மந்துவில் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸின் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (17.04.2024) காலை இடம் பெற்றுள்ளது. ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் கிராமத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கும் மக்களுக்கும் இடையில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் மக்கள் மற்றும் அமைச்சர் குழுவினரிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த...
  பெலியத்தை பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தந்தையை கூரிய ஆயுத்தினால் தாக்கி காயப்படுத்திய கும்பல், மகனை வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று (17.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 12 வயதுடைய சிறுவனே மேற்படி சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 38 வயதுடைய தந்தை படுகாயம் அடைந்த நிலையில் பெலியத்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணித் தகராறு காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின்...
  வீடொன்றின் படுக்கையில் எரிகாயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக உயிரிழந்தவரின் மகன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டதாக உடவலவ பொலிஸார் தெரிவித்தனர். உடவலவ பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பொடி அப்பு எனப்படும் பத்திரனகே அஜித் விஜேரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார். பொலிஸாரிடம் வாக்குமூலம் இறந்தவரின் மனைவி, வீட்டுக்கு முன்பாக கடை நடத்தி வருவதாகவும், அன்றைய தினம் அதிகாலை அந்த கடையில்...
  அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மாலை நீராடச் சென்ற போது காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலமே நேற்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 16 வயதுடைய மொஹமட் சமீன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சாதாரணதர பரீட்சைக்குத் தோற்ற இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் நேற்று முன்தினம்...
  பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் காயமடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட காருடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் காயமடைந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
  பொலிஸ் சிசிடிவி கமரா அமைப்புடன் பொது மற்றும் தனியார் துறைக்கு சொந்தமான கமரா அமைப்புகளை இணைத்து குற்றங்களை கண்டறியும் பாதுகாப்பு கமெரா அமைப்பை விரிவுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக கொழும்பு நகரின் தனியார் பிரிவில் இரண்டாயிரம் கேமராக்கள் சிசிடிவி. அமைப்பில் இணைந்து கொள்ள விரும்புபவர்களுடன் கலந்தாலோசித்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார். இந்த சிசிடிவி வரம்பை விஸ்தரிப்பதுடன், இலங்கையின் ஏனைய...
  குருநாகல் – பொல்பித்திகம பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் இலங்கை போக்குரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமமைந்துள்ளனர். குருநாகல், பொல்பித்திகம, ரம்பாகொடெல்ல பகுதியில் வீதியோரத்தில் லொறியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், குருநாகலில் இருந்து – மடகல்ல நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, அதன் பின்னால் அதிவேகமாக வந்து மோதியுள்ளது. இந்த விபத்தில், 8 பேர் காயமடைந்த நிலையில், பொல்பித்திகம ஆரம்ப...
  கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். வாழைத்தோட்ட பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். அளுத்கடை பகுதியில் உள்ள வீதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரை வாழைத்தோட்ட...
  கந்தேநுவர, ஹுனுகல பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக கணவரே மனைவியை கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹுனுகல, அல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கந்தேநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
  தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் ஆராயப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நுவரெலியா – மீபிலிபான “அபி யூத்” இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் இணைந்து இன்று (14) ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைவாக, இடம்பெற்ற...