தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Goat படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 69 படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. ஆனால், ஹெச். வினோத் தான் இப்படத்தை இயக்கப்போகிறார் என்றும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
விஜய்க்கும் -...
தெற்கு மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
விமானம் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தின் மீது மோதியது இந்த விபத்து குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் விமானி மற்றும் இரண்டு பயணிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்காக, மத்திய அரசாங்கத்திடம் ஒட்டாவா நகரம் உதவி கோரியுள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 32.6 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரியுள்ளது.
ஒட்டாவா நகர முதல்வர் மார்க் சுட்கிளிப் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக இந்த உதவி கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நகரத்திற்குள் வரும் ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு அதிகளவில் உதவிகள் வழங்கப்படக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால அடிப்படையில் ஏதிலிகள் தொடர்பிலான...
கனடிய பெண் ஒருவர் 20 நிமிட டாக்ஸி பயணத்திற்காக ஏழாயிரம் டொலர் கட்டணத்தை செலுத்த நேரிட்டுள்ளது.
சட்டவிரோதமான டாக்ஸி நிறுவனமொன்றின் சேவையை பெற்றுக்கொண்டதனால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
அன்டார்டிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்ட போது இவ்வாறு குறித்த பெண் ஏமாற்றப்பட்டுள்ளார்.
பெட் செக்லெடி என்ற பெண்ணே இவ்வாறு மோசடி நிறுவனமொன்றிடம் சிக்கியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் சன்டியாகோ விமான நிலையத்தில் டாக்ஸி ஒன்றை பெட் செக்லெடி மற்றும் அவரது நண்பி ஆகியோர் புக் செய்துள்ளனர்.
புக்...
ஈரான் தரப்பிலிருந்து முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், இஸ்ரேல் கடும் ஆத்திரமடைந்துள்ளது.
ஈரானின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது? என்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இந்த நடவடிக்கை மோதலை அதிகரிக்கச் செய்யும் என்பதால், தாக்குதல் எண்ணத்தை கைவிடும்படி இஸ்ரேலை நட்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இஸ்ரேல் முழு அளவிலான தாக்குதலை முன்னெடுத்தால் ஈரான் நாட்டின் அணுமின் நிலையங்களை குறிவைக்கலாம் என கூறப்படுகிறது.
ஈரானில்...
சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த விக்டோரியா ரோஸ் எனும் மருத்துவர் , தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார்.
காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார்.
16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அதோடு துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய...
உக்ரைனில் உள்ள டிரிபில்லியா மின்சார உற்பத்தி நிலையத்தை கடந்த 11 திகதி ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதமடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில்,
"ரஷ்யா 11 ஏவுகணைகளை மின்சார உற்பத்தி நிலையம் நோக்கி வீசியது. அதில் உக்ரைன் ராணுவம் ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. 4 ஏவுகணைகள் டிரிபில்லியா மின்சார...
ஓமானில் பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காணாமல் போன இருவரை மீட்புக் குழுக்கள் இன்னும் தேடி வருவதாக அவசரகால மேலாண்மைக்கான தேசியக் குழு தெரிவித்துள்ளது.
மோசமான காலநிலை காரணமாக முசந்தம், அல் புரைமி, அல் தாஹிரா மற்றும் அல் தகிலியா ஆகிய ஐந்து அலுவலகங்களில் உள்ள அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் பணியை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக...
டென்மார்க்கில் 400 ஆண்டுகால டென்மார்க் கலாச்சார பாரம்பரியம் தீப்பிடித்து எரிந்துள்ளதாக அந்நாட்டு கலாச்சார அமைச்சர் ஜாகோப் ஏங்கல்-ஷ்மிட் தெரிவித்துள்ளார்.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனின் மத்தியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பங்குச் சந்தை கட்டிடம் செவ்வாய்கிழமை (16) காலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
1625 ஆம் ஆண்டுக்கு முந்தைய கட்டிடம்
இந்த கட்டிடம் 17 ஆம் நூற்றாண்டின் போர்சன் நகரின் பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும். இது “தி ஃபோல்கெட்டிங்" எனப்படும் டென்மார்க்கின் பாராளுமன்றம் மற்றும்...
வவுனியா நகரில் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயை, மூவர் அடங்கிய கும்பல் வழிமறித்து, அவரின் குழந்தையின் மீது கத்தியை வைத்து மிரட்டி நகைகளை பறித்ததுடன், மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் இன்று (2024.04.17) அதிகாலை இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விசாரணை
குறித்த பெண் கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில்...