கல்வித்துறை உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறைகளை அனுமதிக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்கள் அதற்கு குறைவான காலப் பகுதிக்கான குறுகிய கால வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறைகளை மாகாண கல்விப் பணிப்பாளர்களே அனுமதிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம்
கல்வி அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறை கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறைசார்...
வவுனியாவில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த நபர் ஒருவருடன் இணைந்து புளியங்குளம் பொலிஸார் இளம் குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (15.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
வவுனியா, சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர்
குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்ததாவது, "விசாரணை ஒன்று இருப்பதாக புளியங்குளம் பொலிஸார் என்னை அழைத்தனர்.
நான் அங்கு சென்ற நிலையில் எனது...
மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய சிங்கள அரசியல்வாதி : மரணத்தை முன்கூட்டியே அறிந்த பாலித்த
Thinappuyal News -
மனிதநேயம் கொண்டவரான முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் இழப்பு செய்தி நாட்டிலுள்ள மூவின மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரதியமைச்சராக செயற்படும் அரசியல்வாதி என்ற நிலையை கடந்து தானும் சாதாரண மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையில் அவரின் வாழ்க்கை நடைமுறைகள் காணப்பட்டிருந்தன.
இந்நிலையில், தனது மரணத்திற்கு ஏற்கனவே தயாராக இருந்ததாக பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே அறிந்த மரணம்
மரணிக்க சில வாரங்களுக்கு முன்னர் ஊடகமொன்றுக்கு வழங்கிய...
இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலில் அண்டை நாடு என்ற அடிப்படையிலும், புத்தாண்டு பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டும் இந்தியா இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் கந்தர்பால் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குறித்த படகில் சிறார்களும் உள்ளூர்வாசிகளும் கந்தர்பாலிலிருந்து பத்வாரா வரை பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஜீலம்...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பேராயர் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவர் திடீரென கத்தியால் தாக்கியுள்ளார்.
தேவாலயத்தின் ஆராதனை சமூக வலைதளங்களில் நேரடியாக பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் இராணுவம் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களது இருப்புகளை கண்டறிந்து துல்லியமாக தாக்கி அழித்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியபோது எதிர்பாராத விதமாக சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டது.
இதில் இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்த நிலையில், நேற்று ஈரான் நேரடியாக டிரோன் மற்றும்...
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதியை காப்பாற்ற முயற்சித்த நபரும் நேற்று பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திகன, கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நேற்று இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற முன் வந்த 30 வயதுடைய பிரதேசவாசி ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கி உயிரிழந்த கணவன் மனைவி இருவரும் திஹாரிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், குறித்த பெண்ணின் கிராமத்திற்கு வந்திருந்த...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த ஹென்ர்சி கிளாசென் சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30ஆவது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 287 ஓட்டங்கள் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 277/3 ஓட்டங்கள்...
பாறுக் ஷிஹான்
கடலரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மருதூர் சதுக்கம் மற்றும் அதனை அண்டிய மீன்பிடி பிரதேசம் துரித கதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) முதல் இன்று வரை புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேற்குறித்த பகுதிகள் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) காலை சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்ற செயற்பாட்டாளர்களினால் முகநூல் மற்றும் ஊடகங்கள் வாயிலாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.
மேற்படி விடயம் தொடர்பில் இயற்கையை நேசிக்கும் மன்ற செயற்பாட்டாளரும்இ...