போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த கும்பலை விரட்டியடிக்க மக்கள் தயாராகி வருகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். இனிவரும் தேர்தல்கள் எமக்கு வெற்றி வாய்ப்புக்களையே பெற்றுத் தரும். நாம் மீண்டெழுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வீழ்ந்துவிட்டது, இனி அந்தக் கட்சிக்கு மீள் எழுச்சி இல்லை என்று...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும்...
  சீன மக்கள் மண்டபத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பளித்தார், மரியாதை வேட்டுக்களுடன் மிகுந்த கௌரவமான முறையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இருதரப்பு அரச தலைவர்களுக்கும் இடையில் சுமூகமான கலந்துரையாடல் நடைபெற்றதோடு அடுத்து இரு தரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தினார். அத்தோடு...
  அரசியல் கைதிகள் பலரை அரசாங்கம் விசமாத்திரை கொடுத்து கொன்று விட்டதா?இரணியன்- அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்கிற பொறுப்பற்ற கருத்து ஏற்புடையது அல்ல - இன்றைய சமகால அரசியல் என்பது தமது தமது அரசியல் கட்சிகளை பலப்படுத்தவும் பதவி மோக ஆசைகளுமே ஆகும் 30 வருடகால தமிழ் இனத்தின் ஆயுதப் போராட்டமானது பல்வேறு பரிமாணங்களை கொண்டது மூன்று சகாப்தங்கள் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் 1990 காலப்பகுதிகளில் இருந்து பயங்கராவாத தடைச்சட்டத்தின் கீழ்...
  தனது 18வது வயதில் இருந்தே மோட்டார் சைக்கிள் ரேஸில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அஜீத்தின் கனவு. பல போட்டிகளில் கலந்து கொண்டாலும், விபத்துகள், காயங்கள் காரணமாக அவரால் அதில் தொடர முடியவில்லை. அதே நேரத்தில் நடிக்க வந்து விட்டதால், சினிமாவில் கிடைத்த வெற்றி அவரை ரேஸ் பக்கம் திரும்பவிடவில்லை. மேலும் சினிமா நடிகராக கிடைக்கும் புகழை விடவும், இதில் கிடைக்கும் ஊதியம் அஜீத்துக்கு மிக முக்கியமாக இருந்திருக்கும்...
  கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை  வாக்கு மூலம்!  0 கண்டி – அம்பரப்பொல பகுதியில் கடந்த 11-01-2025 ஆம் திகதி கடத்தப்பட்ட பாடசாலை மாணவியையும், அவரை கடத்திய சந்தேக நபரையும் அம்பாறை பொலிஸ் அதிகாரிகள் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், மீட்கப்பட்ட மாணவியும் இன்றையதினம் (14-01-2025) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்ததோடு, ஊடகங்களிடம் பேசுகையில், தனது மகளுக்கும் சந்தேக...
  ஜனாதிபதி சீனா சென்றடைந்தார்.. இராணுவ மரியாதையுடன் வரவேற்பு..! சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 )சீன நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடொன் வரவேற்றதோடு சீன இராணுவத்தின் முழு இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு...
  கடத்தப்பட் மாணவி பொலிசாரல் மீட்ப்புவிடுதி ஒன்றிக்கு அழைத்து சென்ற கடத்தல் காரன் நடந்தது என்ன?
  புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரை வைத்து தவறான தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும்  அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும், நேற்றையதினம்(12) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை மூன்று மாதங்களாக அழைத்து வீட்டில் வைத்து தவறான தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல் பின்னர் குறித்த சிறுமி கிளிநொச்சியில் உள்ள...
  புங்குடுதீவு இருபிட்டி சனசமூக நிலையத்தின் பவள விழா 2025 2025-01-11 நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் இறுதி போட்டியில் புங்குடுதீவு காந்தி அணியினை மோதிய எமது அணியினர் காந்தி அணியினை வீழ்த்தி கிண்ணம் வென்றது போட்டிகளை சிறப்பாக விளையாடிய எமது மகளிர் அணியினருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறோம்