கொஸ்கொட ஊரகஸ்மன்ஹந்திய மற்றும் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மக்களை பீதியில் வைத்திருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் பல வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளை கும்பலை வழிநடத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்களும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மாமி மற்றும் மருமகள் முறை உறவினர்களான 29 மற்றும் 40 வயதுடைய இரு பெண்களும், கைது செய்யப்படும் போது 2410 மில்லிகிராம்...
  புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாக இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. குறித்த மோதல் சம்பவம் இன்று (15.4.2024) அதிகாலை 12.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணை சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. பட்டா ரக வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி...
  கொட்டகலை பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் அறையொன்றில் தீ பரவியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டகலை (Kotagala) பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணை தீக்காயங்களுக்குள்ளான பெண் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  வெளிநாட்டு கடனை செலுத்தாதிருக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். “மச்சான் கடனை மறந்து விடுவோம் என வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 100 பில்லியன் டொலர் கடனை தவிர்த்து விட முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரின் சமுர்த்தி வங்கி கூட கடன் செலுத்தாவிட்டால் வழக்குத் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 100 பில்லியன் டொலர் எனவே கடனை செலுத்தாமலிருக்க முடியும் என மக்களுக்கு நகைச்சுவை கதைகளை கூற முடியாது அவர் தெரிவித்துள்ளார். இந்த...
  மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை யாய 04 பகுதியில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர், பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், அவரது நிலை மோசமடைந்ததையடுத்து மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறுமி மீது துப்பாக்கி...
  கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் மது போதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்ற குழுவினர் வீட்டினை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (12) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த மேற்படி குழுவினர் வீட்டின் உரிமையாளரை தாக்கியதுடன் பெறுமதியான பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
  வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இ.போ.ச பேரூந்தினை வழிமறித்து தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பழைய பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தரித்து நின்ற சமயத்தில் அங்கு வந்த யாழ்ப்பாணம் - வவுனியா வழி தட தனியார் பேரூந்து, பேருந்தினை பாதையில் நிறுத்தி விட்டு இ.போ.ச பேருந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமையுடன் இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும்...
  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. பலத்த மழைவீழ்ச்சி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்100 மி.மீ...
  நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 சிறைக்கைதிகள் இன்று காலை விடுதலைசெய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இந்த சிறைக்கைதிகளை விடுதலைசெய்யும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
  மொனராகல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். ஹம்பேகமுவ சீனுகல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த இருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் தப்பிச் சென்றுள்ளனர். வீட்டின் உரிமையாளரும் அவரது உறவினர்களும் விருந்தில் ஈடுபட்டிருந்த வேளையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் , 24 வயது மற்றும் 42 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹம்பேகமுவ மற்றும் எம்பிலிபிட்டிய...