ஹொரவ்பொத்தான பிரதான வீதி கம்பகொட்ட பகுதியில் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து -மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் மட்டக்களப்பு - பாரதி லேன் பகுதியில் வசித்து வரும் யோகநாதன் அசோக்குமார் (40வயது) மற்றும் சுப்ரமணியம் சிவசுப்ரமணியம் (44வயது) ஆகிய இருவருமே காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக சிகிச்சை காயமடைந்த இருவரையும் மொரவெவ பொலிஸார் மஹதிவுல்வெவ பிரதேச...
  பொருளாதார நெருக்கடி தொடர்பில் எனது பொருளாதார கொள்கை வகுப்பாக்கக் குழுவினரோடு மாற்று அணியின் பொருளாதாரக் குழுக்களையும் ஒன்றிணைத்து விவாதம் நடத்துவோம் என நாகரிகமாக அழைக்கும்போது, கோழைகள் போன்று விவாதங்களில் இருந்து தப்பியோட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 154ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மொனராகலை பாடசாலை ஒன்றில் வழங்கி...
  வீடற்ற மக்களுக்கு 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி, காணி, வீடமைப்பு மற்றும் வர்த்தக உரிமைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை வலுவான பொருளாதாரத்தின் அங்கமாக மாற்றுவதற்கு அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மோதர மற்றும் ரந்திய உயன அடுக்குமாடி குடியிருப்புகளை கையளிக்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். வீட்டுத் திட்டம் 2010ஆம் ஆண்டு காஜிமா...
  இன்றையதினம்(13.04.2024) மதுபானசாலைகள் திறக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் பொய்யானது என கலால் திணைக்களம் மறுத்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (12.04.2024) மற்றும் இன்று (13.04.2024) நாடு பூராகவும் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என கலால் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. கடுமையான சட்ட நடவடிக்கை எவ்வாறாயினும், வீட்டு விருந்தினர்கள், ஹோட்டல்களில் தங்கியிருக்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...
  மின் மற்றும் நீர் கட்டணம் செலுத்தும் பாவனையாளர்கள் கட்டணம் செலுத்துதல் மற்றும் பற்றுச்சீட்டு பெறுதல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மின்சார கட்டணம் மற்றும் நீர் கட்டணங்களை உள்ளூர் முகவர்கள் மற்றும் தபாலகங்களில் செலுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பணம் கையாடல் சில இடங்களில் மக்களிடம் மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணத்திற்கான பணத்தை பெறும் தபாலக உத்தியோகத்தர்கள்...
  ஏ9 வீதியின் ரம்பேவ பகுதியில் கார் ஒன்று கவனக்குறைவாக வீதியில் திரும்பியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்றுமுன்தினம் மதியம் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து காருடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் பலி விபத்தில் காரை ஓட்டிச் சென்ற ஆசிரியர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில் அதில் பயணித்த 3 வயது குழந்தை படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  மசாஜ் நிலையம் என்ற பெயரில் தகாத செயற்பாடுகள் இடம்பெற்று வந்த விடுதி பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது விடுதியின் முகாமையாளர் 6 பேர் மற்றும் பெண்கள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹரகம நகரத்தை கேந்திரமாக கொண்டு மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாரிய அளவிலான தகாத செயற்பாடுகளில் ஈடுபடும் விடுதிகள் உருவாகியுள்ளன. மசாஜ் நிலையம் அதற்காக நகர மத்தியில் அமைந்துள்ள பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகளின் மாணவர்கள் பலர் இந்த விடுதிக்கு செல்வதாகவும்...
  மெரிக்க டொலரின் பெறுமதி எதிர்காலத்தில் 280 ஆக குறையும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த சிரமங்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் அனைவரும் தற்போது சற்று தளர்வாக வாழ்க்கையை கழித்து வருகின்றோம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னர் அவ்வாறான நிலைமை ஒன்று காணப்படவில்லை. குறைந்த வருமானம் அனைவரும் துன்பங்களை அனுபவித்தோம். பணிக்கு செல்ல முடியவில்லை. உணவு பெற்றுக் கொள்ள...
  விமானப்படையில் சேவையாற்றும் 35,000 விமானப்படை வீரர்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 18,000 ஆக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ (Udeni Rajapaksa) தெரிவித்துள்ளார். குறைக்கப்பட்ட விமானப்படையினரின் எண்ணிக்கைக்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த நம்புவதாகவும் விமானப்படை தளபதி கூறியுள்ளார். அக்குரகொட விமானப்படைத் தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விமானப்படைத் தளபதி இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த விமானப்படை தளபதி, விமானப்படையை குறைக்கும்...
  முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களில் 200 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான வாடகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டு வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், குறித்த வாகனங்களின் பெறுமதி எட்டு கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என அந்த அமைப்பின் அழைப்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க (Wasantha samarasinghe) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...