கைலாகொட பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீட்டின் சுவரில் மோதியதில் விபத்து(Accident) ஏற்பட்டுள்ளது. இதன்போது அவ்வழியில் சென்ற கார் ஒன்றும் குறித்த பேருந்தில் மோதியதில் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்துக்கான காரணம் இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெதபத்தனையில் இருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த தனியார் பேருந்தின் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து...
  மதவாச்சி-விரால்முறிப்பு பகுதியில் போக்குவரத்து பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் விரைகள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் கடந்த 7 ஆம் திகதி காயமடைந்த இளைஞன் மற்றுமொரு நண்பருடன் சிறிய லொறியொன்றில் பயணித்த போது, போக்குவரத்து பொலிஸார் லொறியை நிறுத்தியுள்ளனர். குறித்த இளைஞன் லொறியை நிறுத்தாது சென்றதால் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று வாகனத்தை நிறுத்தி அவரையும் அவரது நண்பரையும் கை கால்களை கட்டி வாகனத்தில்...
  அக்குரல பிரதேசத்தில் இடம்பெற்ற வெளிநாட்டவர்களுக்கான புத்தாண்டு மரதன் ஓட்டப் போட்டியில் அதிகளவான வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அங்கு இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு போட்டிகளிலும் பலர் கலந்து கொண்டிருந்தனர். இலங்கை போன்ற ஒரு நாட்டுக்கு வந்து புத்தாண்டை கொண்டாடியதை நினைக்கும் போதே அற்புதமாக உணர்வதாக வெளிநாட்டவர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டவர்கள் நெகிழ்ச்சி இலங்கை மக்கள் மிகவும் அன்பானவர்கள் நட்புறவுக் கொண்டவர்கள், அனைவரையும் வரவேற்கும் நன்மை கொண்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இது தங்கள் முதல் பயணம் போன்று உணர...
  நாட்டின் தேசிய பூங்காக்களைப் பார்வையிட வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 200,000 இற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் கடந்த மூன்று மாதங்களில் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானம்...
  விமானப்படையின் கண்காட்சி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெறவுள்ளதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த கண்காட்சி எதிர்வரும் மே 29 முதல் ஜூன் 2 வரை கொழும்பு துறைமுக நகரத்தில் (Portcity) இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்விற்கான நுழைவுச் சீட்டு கட்டணம் பெரியவர்களுக்கு 200 ரூபாவாகவும், சிறுவர்களுக்கு 100 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில்...
  அவிசாவளை (Avisavala) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த விடுதியில் நேற்று (10) மாலை தங்கியிருந்த தம்பதிகளில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சடலம் உயிரிழந்த யுவதி நேற்று மாலை நபர் ஒருவருடன் ஹோட்டலுக்கு வந்து...
  ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய எண்ணெய் அபிஷேகம் திங்கட்கிழமை (15) நடைபெறவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
  சுதந்திரக் கட்சியை (Sri Lanka Freedom Party) நிரந்தரமாக மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை (Nimal Siripala de Silva) பதில் தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுத்ததாக அக்கட்சியின் புரவலர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் நேற்று முன்தினம் (08) கலந்து கொண்ட முன்னாள் அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு...
  தேசிய பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களை விட தேசிய மக்கள் சக்திக்கு அதிக கரிசனை உள்ளதாக அந்த கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தமது கட்சி திடமாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இன்று (9) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழர்களின் தேசிய பிரச்சினை இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தமிழர்களின்...
  மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 63 வயதுடைய சாந்தினி எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், நேற்றைய தினம்(9) வீட்டில் சடலமாக காணப்பட்டதை அயலவர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். மேலதிக விசாரணை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர்...