ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீனப் பயணம் இரு நாடுகளுக்கும் மிக முக்கியமான பயணமாக இருக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவுக்கு 2025, ஜனவரி 14 முதல் 17 வரையில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அந்நாட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இலங்கையில் புதிய ஜனாதிபதி பதவியேற்ற பிறகு...
  இலங்கைக்கு பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிட்டுள்ளது. அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ள வாகனங்களுக்கு 200%-300% வரி விதிக்கப்பட்ட உள்ளது.   நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
   இலங்கை நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்புத் துறையின் பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவத்தில், அத்துறையின் உதவி பராமரிப்பு நிர்வாகி உட்பட மூன்று பேரை பணிநீக்கம் செய்ய சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன முடிவு செய்துள்ளார். சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்திய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சந்தேகநபர்களை சபாநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார்.  துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள்   கடந்த...
  தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களே, ஆதரவாளர்களே! இன்னும் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. தேர்தல்களில் போட்டியிட உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தமிழர் வாழும் பகுதிகளில் தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் உங்களின் விபரங்களை எமக்கு அனுப்பிவையுங்கள்.  உங்களுக்கு உற்சாகமான செய்தி ஒன்று. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எனக் கூறிக்கொண்டு கட்சியை குறுக்குவழியில் அபகரிக்க முயன்ற மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து குழுவினரின் செயற்பாட்டை  நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழர்களின்...
  விவசாயிகளிடம் இருந்து 130 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு முடியுமாயின், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து காட்ட வேண்டும் என தாம் சவால் விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (07) கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். இதுவரையில் மோசமானதொரு பொருளாதார கொள்கை ஒன்று பின்பற்றப்பட்டதாக அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறாயின் எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லவுள்ள பொருளாதார கொள்கை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும். அரசாங்கம் கூறுகின்ற...
  ''இரு தரப்புகளுக்கும் இடையில் வர்த்தக நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக எட்கா உடன்படிக்கையை உடனடியாக கைச்சாத்திட முயற்சிக்கின்றோம்," என இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் கூட்டாக நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இந்த கருத்தானது, எட்கா உடன்படிக்கை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடல் நடத்தியிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. எட்கா உடன்படிக்கைக்கு கடும் எதிர்ப்புகளை வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன) தலைமையிலான...
 இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவியான கலகொடாத்தே ஞானசாரவுக்கு ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதால் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஞானசார, ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் முக்கிய நபர். கடந்த 2016ஆம் ஆண்டு அவர் தெரிவித்த இஸ்லாமிய வெறுப்பு கருத்துகள் தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் 9ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையில்...
இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள 'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டமானது, அடிமட்ட மக்களை நேரடியாக பாதித்துள்ளதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். முச்சக்கரவண்டி, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கடவுள் சிலைகள் உள்ளிட்ட மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு போலீஸார் வற்புறுத்துவதாக மக்கள் கூறுகின்றனர் தேங்காய், அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர். இந்த நிலையில், ஜனவரி மாதம் முதலாம் தேதி 'கிளீன்...
  2016 – 2020 காலப்பகுதியில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றை நிறைவு செய்வோம். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய 2016 முதல் 2020ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்திற்கமைய ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீளாய்வு செய்து நிறைவு செய்யவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஜனவரி 7ம் திகதி பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்...
  JICAஇன் சிரேஷ்ட உப தலைவர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு இடையிலான சந்திப்பு ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஷொஹெய் ஹாரா அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இலங்கை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நாட்டின் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கென JICA நிறுவனம் வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கடன் மறுசீரமைப்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை நிறைவு...