சிறையில் உள்ள தனது புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாயொருவர் மீது சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது
சிறைச்சாலையில் உள்ள மகனைப் பார்வையிடச் சென்ற வயோதிப தாய் ஒருவர் அறியாமை காரணமாக மகனுக்கு கொடுக்கவென பீடி ஒரு கட்டு எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவ பரிசோதனை
இதனையடுத்து யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாயையும் மகனையும் கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்குப்...
மெனிக்ஹின்னவைத்தியசாலையின் ஊழியர்கள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக நோயாளி ஒருவரை அழைத்து வந்த ஆறு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
ஞாயிறு (29) முன்னிரவில் திடீர் நோய்வாய்ப்பட்ட திகணை பிரதேச இளைஞர் ஒருவரை அவரது உறவினர்கள் மெனிக்ஹின்னை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
நோயாளியை வைத்தியசாலையின் அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன் போது குடிபோதையில் இருந்த வைத்தியசாலை ஊழியர்கள் மேற்கொண்ட கடும் தாக்குதல் காரணமாக நோயாளியை...
காதல் உறவின் அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளான இரு இளைஞர்களும் யுவதியொருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் முல்லேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன், சந்தேகநபர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லேரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருடன் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் சில காலமாக காதல் உறவை வளர்த்துக் கொள்ள முயற்சித்து வந்த...
இளம் தாய் ஒருவர் கொடூர செயற்பாடு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி, மஹாபாகே பிரதேசத்தில் நேற்று 9 மாத குழந்தையை காணவில்லை என தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணையில், அவர் வசித்த வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட குழந்தை
மேலதிக விசாரணையின் போது, குழந்தையை கிணற்றில் வீசி தாயே கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய, கொலை தொடர்பில் குழந்தையின் தாயார் சந்தேகத்தின் பேரில் கைது...
கந்தளாய் பகுதியில் நிராயுதபாணிகளான 8 தமிழர்களை கைது செய்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு குளியாப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனை வித்துள்ளார்.
ஆயுள் தண்டனை
குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை மாத்திரம் குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்யுமாறு மேலும் அவர் உத்தரவிட்டார்.
1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் திருகோணமலை மேல்...
வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
இதன்போது போதிய அளவு நீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், வெட்ட வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சிவநகர் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையின் உரிமையாளர் மீது இன்று அதிகாலை மரக்காலையில் பணிபுரியும் இளைஞன் ஒருவரால் தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதிதீவிர சிகிச்சை பிரிவு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை வீதி சிவநகர் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையில் பணிபுரியும் ஊழியரால் மரக்காலை உரிமையாளர் மீது நேற்று (28.04.2024) அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மல்லிகைத்தீவினை சேர்ந்த மரக்காலை உரிமையாளர் வேலுப்பிள்ளை வரதகுமார் (35 வயது)...
ஹட்டன் பகுதியில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் கினிகத்தேனை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை அவரது வீட்டுக்கு அழைத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் தற்போது பணிபுரியும் பாடசாலைக்கு வருவதற்கு முன்னர் இந்த மாணவி கல்வி பயிலும் பாடசாலையில் பல வருடங்கள்...
காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே இன்று (2024.04.28) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி உடல் இயலாமை (காய்ச்சல் காரணமாக) அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இன்று உடல் நிலை மோசமாகவே,...
ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும், இருப்பினும் ஜூன் மாத முடிவில் இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவனர் பசில் ராஜபக்ஷவுடனான விசேட சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கு முன்னதாக முடிவை மே மாத நடுப்பகுதியில் தெரிவிக்க ஜனாதிபதி திட்டமிடப்பட்ட போதிலும் அதனை பிற்போடவுள்ளார் என தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி வேட்புமனுத் தொடர்பில் ரணிலின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என இந்தக் கூட்டங்களில்...