கிருமித் தொற்று ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை புனித நகரை சேர்ந்த 34 வயதான கோணேஸ்வர ராசா நிஷாந்தன் என்பவரே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26-04-2024) உயிரிழந்துள்ளார்.
அவருக்கு உடலில் கட்டி இருப்பதாக கடந்த புதன்கிழமை (24) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் குறித்து நேற்று (27) பருத்தித்துறை...
களு கங்கையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி குறித்த சம்பவமானது நேற்று (26) பிற்பகல் ஹொரண, போருவதந்த பிரதேசத்தில் களு கங்கையில் மாணிக்கக்கல் அகழ்ந்த போதே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நபர் களு கங்கையில் மாணிக்கக்கல் அகழும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் நீரில் மூழ்கியதாகவும் ஆபத்தான நிலையில் இருந்த இவரை மீட்டு ஹொரண வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(26) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, “குறிப்பாக தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
யாழில் இடம்பற்ற சம்பவம்
குறிப்பாக வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ் மத்திய கல்லூரியில்...
இலங்கையிலிருந்து கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சிறுவர்களின் நிலை தொடர்பாக காவல்துறையினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமையன்று (24) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை மற்றும் அவர்களுடன் கொழும்பில் இருந்து கோலாலம்பூருக்கு சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, இந்த வாரம் மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் மற்றும் தந்தை ஆகியோரிடம் காவல்துறை...
இலங்கை போக்குவரத்து சபைக்கு சித்திரை புத்தாண்டின் போது சுமார் 1500 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் ஐந்தாம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இந்த வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் ஒரு வாரத்தில் அதிவேக வீதியின் வருமானம் 130 மில்லியன் ரூபா என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்திற்கு இடையூறு
அத்தோடு கடந்த 12 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள்...
லிவர்பூல் அணி அதிர்ச்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மேலாளர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
லிவர்பூல் தோல்வி
பிரீமியர் லீக் (Premier League) தொடர் போட்டியில், லிவர்பூல் அணி (Liverpool) புள்ளிப்பட்டியலில் 16வது இடத்தில் இருக்கும் எவர்டோன் (Everton) அணியுடன் மோதியது.
இப்போட்டியில் எவர்டோன் அணி 2-0 என்ற கணக்கில் லிவெர்பூலை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து லிவர்பூல் அணியின் மேலாளர் ஜுர்கென் க்ளோப் (Jurgen Klopp) ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
மன்னிப்பு
அவர் கூறுகையில், ''இன்று...
கடைசி பந்து வரை த்ரில்! 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் வெற்றி
Thinappuyal News -
டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் 2024-ன் 40-வது லீக் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசி ஓவரில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
டெல்லி அணியின் அபார பேட்டிங்
நாணய சுழற்சியில் வென்று, முதலில் பந்துவீச குஜராத் அணி முடிவு செய்தது, இதனால் முதலில் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் எடுத்தது.
கேப்டன் ரிஷப் பண்ட்...
டி20 உலகக்கிண்ண தொடரில் கோலி, ரோஹித் எந்தவித பயமுமில்லாமல் விளையாட வேண்டும் – கங்குலி
Thinappuyal News -
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி, டி20 உலகக்கிண்ண தொடரில் கோலியும், ரோஹித்தும் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வரும் சூன் மாதம் டி20 உலகக்கிண்ண தொடர் நடைபெற உள்ளது.
இதில் இந்திய அணி வீரர் விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி தனது விருப்பம் குறித்து தெரிவித்துள்ளார்.
அவர்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மிகவும் விரும்புவதாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்டோய்னிஸ் சதம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்துகளில் 124 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் நடப்பு தொடரில் லக்னோ அணி இரண்டாவது முறையாக சென்னை அணியை வீழ்த்தியது.
போட்டிக்கு பின்னர் பேசிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) அவுஸ்திரேலிய அணியில் தனக்கான இடம் குறித்து பேசினார்.
கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க
அப்போது அவர் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் மத்திய ஒப்பந்தப்...
சென்னை சூப்பர் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
ருதுராஜ் சதம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024-ன் 39வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ஓட்டங்கள் எடுத்தது.
கேப்டன்...