நீண்டகால போராட்ட வரலாற்றில் விடுதலைப்புலிகளின் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடைசெய்யப்பட்டிருந்தது. நேற்றைய தினம் இந்தத் தடையானது நீக்கப்பட்டுள்ள இந்நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் சந்தோஷப்படும் அதேவேளை இதைவைத்துக்கொண்டு அடுத்தகட்ட தமிழ்மக்களுக்கான விடுதலை நகர்வுகளை நகர்த்திச் செல்லவேண்டும். அமெரிக்கா உட்பட 57 நாடுகளும், 22 சர்வதேச அமைப்புக்களும் சமாதான ஒப்பந்த காலத்தில் விடுதலைப்புலிகளுடன் நெருங்கி நட்புறவுகளை வைத்திருந்தது மாத்திரமல்ல. யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்து சமாதானப்பேச்சுக்களில் ஈடுபட்டு நிரந்தர சமாதானத்தினை இலங்கையில்...
  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு தபால் அட்டை அனுப்புமாறு முற்போக்கு தமிழ் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அந்தக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - கடந்த சில தினங்களுக்கு முன்பாக வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட...
பலர் சொல்கிறார்கள் கருணா துரோகி, பயத்தில் யுத்தத்தை நிறுத்தினார் என. ஆனால் உண்மை அதுவல்ல. நான் பயத்தில் யுத்தத்தை நிறுத்தவில்லை. எனது மக்கள் வாழவேண்டும் என்பதற்காகவே யுத்தத்தை நிறுத்தினேன் என்கிறார் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன். மட்டக்களப்பு போரதீவுப்பற்று மாதர் கிராமஅபிவிருத்திசங்கங்களிற்கு உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றம் போது, இன்று இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்தவர்கள் எலியாகப் பயந்து பொந்திற்குள் புகுந்து கொண்டபோது, மட்டக்களப்பிலிருந்து நான் சென்றுதான் அவர்களை புலியாக்கினேன். அந்தப்பெரிய...
இலங்கையின் வடபகுதிக்கு பயணிக்கும் வெளிநாட்டு பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன் அனுமதியைப்பெற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தின் பணிப்பாளரும், இராணுவ பேச்சாளருமாகிய பிரிகேடியர் ருவன் வணிகசூரிய 15.10.2014 அன்று விடுத்துள்ள அறிவிப்புக்கு மறுப்பும் கண்டனமும் தெரிவித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும்...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20 நாட்களாக ஜெயிலில் இருக்கும் அவருக்கு ஜாமீன் வழங்க பெங்களூரில் உள்ள கர்நாடகா ஐகோர்ட்டு மறுத்து விட்டது. இதையடுத்து ஜெயலலிதா தன்னை ‘‘ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தனக்கு 66 வயது ஆகிவிட்டது என்றும், நீரிழிவு நோயால் அவதிப்படுவதாகவும் எனவே இவற்றை...
  யுத்தம் முடிவடைந்து சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது என கூறிக்கொள்ளும் இலங்கை அரசாங்கம், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வருடக்கணக்காக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யவேண்டும் என வடமாகாண சபை அனந்தி சசிதரன் கேட்டுக்கொண்டுள்ளார் அனந்தி சசிதரனால் வியாழக்கிழமை (16) அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றியும்...
ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கம் மற்றும் அறிவித்தலை சட்டமா அதிபர் அலுவலகம் மூலம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் குறித்து ஜனநாயகக் கட்சியின் செயலாளர் சுனில் மானவடுவுக்கு சற்று முன்னர் தேர்தல் ஆணையாளர் தெரியப்படுத்தியுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பான வழக்கு மற்றும் இராணுவ...
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளித்தமை தொடர்பில் இலங்கை அரசா  கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்...
இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நான் முட்டாள் என்று அழைக்கமாட்டேன். முதலமைச்சர் என்றும் அழைக்கமாட்டேன். முற்றிலும் முடியாத பரிதாபத்துக்குரிய முன்னாள் அமைச்சர் என்று தான் குறிப்பிடுவேன். இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பதிலடிகொடுத்துள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வடமாகாண நீரியல் ஆய்வு மையத் திறப்பு விழா தொண்டமனாறு நீர்ப்பாசன திணக்கள வளாகத்தில் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக்...
  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஸிதி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் அடிமைகளாக்கி விற்பனை செய்கின்றனர்.ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்குள்ள மலைப்பகுதிகளில் வாழும் சிறுபான்மையினமான யாஸிதி இனப்பெண்களை கடத்தி சென்றுள்ளனர். மேலும் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி சிஞ்சார் மலைப்பகுதியில் குடிபெயர்ந்த யாஸிதி பெண்கள் மற்றும் குழந்தைகள் சமீபத்தில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான யாஸிதி இனத்தைச் சேர்ந்த பெண்களையும், குழந்தைகளையும் தீவிரவாதிகள்...