பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிட்ஸ் இன்று யாழ். ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகையை சந்தித்தார்.
Thinappuyal News -0
பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிட்ஸ் இன்று யாழ். ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ். ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.லோரா டேவிட்ஸ், பிரித்தானிய உயர்த்தானிகராக பதவியேற்ற பின்னர் முதன் முதலாக இன்று யாழிற்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் யாழில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார். அதன்போது, யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையையும் சந்தித்தார்.
அச்சந்திப்பின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வடபகுதிக்கான விஜயம்...
கூட்டமைப்பு தமிழீழத்தைக் கோரவில்லை: மஹிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும்- சுமந்திரன் எம்.பி
Thinappuyal News -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை பிரிப்பதற்கு எவ்வித தயார் நிலைகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார்.
தமிழீழத்தை கைவிட்டால் தாம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை கைவிடுவதாக ஜனாதிபதி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கிளிநொச்சியில் வைத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன்,
கூட்டமைப்பை பொறுத்தவரை அது அதிகார பரலாக்கலை வலியுறுத்தி வருகிறது. அதுவும் ஐக்கிய இலங்கைக்குள்...
என் கணவர் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டார். ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார், எங்களிடம் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம். என் கணவரை மீட்டுத்தாரு ங்கள் என யாழ். தொண்டமனாறு பகுதியில் தாய் ஒருவர் வடமாகாண முதலமைச்சரிடம் உருக்கமான வேண்டுகோளினை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் மேற்படி பகுதியில் மாகாண நீர் ஆராய்ச்சி மையம் திறப்பு விழாவின் போது வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லின கோழிக் குஞ்சுகளும் வடமாகாண கால்...
காங்கேசன்துறை வெளிச்சவீட்டினை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச திறந்து வைத்தார்.
Thinappuyal News -
காங்கேசன்துறை வெளிச்சவீட்டினை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச திறந்து வைத்தார்.
யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் அழைப்பை ஏற்று இருநாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச வரலாற்று முக்கியம் வாய்ந்த காங்கேசன்துறை வெளிச்ச வீட்டினை நேற்று திறந்து வைத்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலர் பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஆரம்ப வைபவத்தில்...
கண்டி - தெல்தெனிய வீதியில் 65 பயணிகளுடன் 200 மீற்றர் பள்ளத்தில் விழுந்த பஸ்.கண்டி - தெல்தெனிய வீதியில் ரம்புக்வெல்ல பகுதியில் இபோச பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்து 64 பேர் காயமடைந்துள்ளனர்.வேகந்தையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த பஸ் 200 மீற்றர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விக்டோரியா நீர்த்தேகத்துடன் இணைந்த நீர்...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டும் – ஊடகவியலாளர் மாநாட்டில் செல்வம் அடைக்கலநாதன்.
Thinappuyal News -
இன்று (15.10.2014) வவுனியாவில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களினால் வினவப்பட்ட வினாக்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதிலளிக்கையில்,
கேள்வி :- தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்கின்ற விடயம் பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக தங்களுடைய கருத்து என்?
பதில் :- தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இந்தப் பதிவைச் மேற்கொள்ளவேண்டுமென்று ஏற்றுக்கொண்டிருக்கின்றார். கட்சிகள் அனைத்தும் வலுவாக செயற்படவிருக்கின்றோம். ஓற்றுமையோடு இந்தப்பதிவை நிச்சயமாக செய்துமுடிப்போம் என்று...
கடந்த வருடம் நடைபெற்ற க. பொ. த. (உயர்தரப்) பரீட்சையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களும் தோற்றி இருந்தனர். இவர்களில் 132 பேர் தற்போது பல்கலைக்கழங்களுக்குத் தெரிவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 12,081 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களில் 650 பேர் சிவில் பாதுகாப்புப் படையணியில்...
மஹிந்த சிந்தனையானது இன்று வடமாகாண மக்களின் மிகப்பெரும் பகுதியினரால் நிராகரிக்கப்பட்ட சிந்தனையாகும் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன-மஹிந்தவிற்கு காரசாரமான கடிதம் எழுதிய விக்னேஸ்வரன்
Thinappuyal News -
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு காரசாரமான கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்துமுடிந்துள்ள இணை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்த நிலையிலேயே அவர் இக்கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
13 காரணங்களை சுட்டிக்காட்டியே அவர் இந்த கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேன்மை தங்கிய உங்களின் பணியாளர் குழாமின் தலைவர் காமினி எஸ்.செனரத் அவர்களால் 2014...
புலிகளால் வற்புறுத்தி பெறப்பட்ட தங்கத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்கவும்: ஜனாதிபதிக்கு ஆனந்தசங்கரி கடிதம்
Thinappuyal News -
தமிழீழ விடுதலைப் புலிகளால் வற்புறுத்தி பெறப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தரவேண்டிய மூன்று பவுண் தங்கத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தங்களுடைய சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த வட பகுதிக்கான விஜயம் வெற்றியடைய வாழ்த்துகின்றேன்.
யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்தும் யாழ்தேவி சேவை ஆரம்பிக்கப்பட்டு, மற்றும் பல புதிய திட்டங்கள் அமுல்படுத்துவதையும், வடபகுதி...