தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பதிவுசெய்யாத வரையிலும் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் சிறந்தது. தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான விடயமாகவே அமையும். அவ்வாறு பதிவுசெய்யப்படவேண்டுமாயின் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக்கூட்டணியையையும் இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. அவர் அதற்கெதிராகவே செயற்பட்டுவந்த ஒருவரும் கூட. பொதுவாக இக்கட்சிகள் அனைத்தும் ஒருகுடையின் கீழ் பதிவுசெய்யப்படுமாயின் தமிழரசுக்கட்சியினால் இக்கட்சிகள் அனைத்தும் ஓரங்கட்டப்படும்....
வைக்கோல் பட்டடை நாய் போன்று வடக்கு மாகாணசபை செயல்படுகிறது என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விமர்சனத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. கிளிநொச்சி வைபவம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். வடக்கு மாகாணசபைக்கும் போதிய நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும், அதனை அந்த மாகாண சபை முறையாக பயன்படுத்த தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். அத்துடன், வைக்கோல் பட்டடை நாய் போன்று மக்களுக்கு...
  அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது என்று அரசின் நம்பகரமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ, தான் மூன்றாவது தடவையாகவும் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார். மறுபுறத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவது அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும், அதற்கான ஆலோசனையை நீதிமன்றிடம் பெறமுடியாது எனவும்...
பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி மலாலா யூசுப்சாய். இப்பகுதி தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு பெண் குழந்தைகள் கல்வி பயில தீவிரவாதிகள் கட்டுப்பாடு விதித்தனர். தனது 12 வயதில் அதை எதிர்த்து அவர் குரல் கொடுத்தார். மேலும் பெண் கல்வி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் பிரசாரம் மேற்கொண்டார். எனவே அவரை தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் உயிருக்கு...
  இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜோகோ விடோடோவை சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளின் உறவுகள் குறித்தும் பேசப்பட்டது. அத்துடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வாழ்த்துக்களையும் இந்தோனேசிவின் புதிய தலைவருக்கு பீரிஸ் தெரிவித்தார். புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட விடோடோ வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்...
யாழிற்கான புகையிரத சேவை ஆரம்பித்து வைக்கப்படவுள்ள நிலையில் அதன் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு 11.10.2014 - சனிக்கிழமையாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை மறுதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில் அதன் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையிலான குழுவினர் நேரில் ஆராய்ந்து கொண்டனர். பளை புகையிரத நிலையத்திற்கு இன்றைய தினம் (11) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தலைமையிலான...
  இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் பௌத்த தீவிரவாத அமைப்பான பொதுபல சேனாவை அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால், இலங்கைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதம் நுழைவதற்கு அதிகபட்ச சாத்தியப்பாடு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எஸ்.ஆர்.ஏ. அமைப்பு (Security Risk Asia) இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. டெல்லியில் இயங்கும் எஸ்.ஆர்.ஏ. அமைப்பின் பிரதானி பிரிகேடியர் பொன்ஸாலே வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பொதுபல சேனாவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள பிரச்சினை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்குச் செல்லாமல் தடுக்க...
  தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வன்னியில் சிறிலங்கா இராணுவம் பாவித்துள்ளது என்கின்றதான குற்றச்சாட்டுக்கள் தற்பொழுது மீண்டும் எழ  ஆரம்பித்துள்ளன. மனிதத்திற்கு எதிரானதென்று சர்வதேச மட்டத்தில் தடைசெய்யப்பட்ட இரசாய ஆயுதங்கள்(chemical weapons) மற்றும் கிளஸ்டர் குண்டுகள் என்று அழைக்கப்படுகின்ற கொத்தனிக்குண்டுகள் (cluster bombs) போன்றனவற்றை விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தங்களின் பொழுது சிறிலங்காப் படைகள் பாவித்ததற்கான ஆதாரங்கள் சர்வதேச அமைப்புக்கள்; உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் தற்பொழுது எழ ஆரம்பித்துள்ளன. வன்னியில் கிளஸ்டர் குண்டுகள்; பாவிக்கப்பட்டதற்கான...
இன்னுமொரு சட்டவிரோத யுத்தத்தைத் தொடங்கி வைத்துவிட்டு, ஜனாதிபதி பராக் ஒபாமா, உலகெங்கிலுமான அமெரிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்த மற்றும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலின் பின்னால் எல்லா நாடுகளும் அணிவகுக்க வேண்டுமென கோரிக்கைவிட,புதனன்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் வந்தார். அந்த உரை வெற்றுத்தனமான ஓய்ந்துபோன முழக்கங்களுடன் குறைகூறல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் இறுதி எச்சரிக்கைகளோடு இணைந்த பகட்டுப்பேச்சின் ஒரு தொகுப்பாக இருந்தது. அது இழுத்தடித்த,சம்பிரதாயமான முறையில், ஒரு அறிவிப்பை தொடர்ந்து...
  தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆனையிறவுப் போர் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை பரந்த, நீண்ட விடுதலைப் போரிலிருந்து தனிமைப்படுத்தியோ, ஆனையிறவு முகாம் தொடர்பான ஒரு குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கையாகக் (Operatino) குறுக்கியோ பார்க்க முடியாது. கொரில்லாப் போர் முறைக்கும், முழுமையான மரபுப் போர்முறைக்கும் இடைப்பட்டதான அரைமரபுப் போர்முறையில் தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம், ஆணையிரவு இராணுவமுகாமை அகற்றுதலே விடுதலைப் புலிகளின் போர்த் தந்திரமாக உள்ளது. விடுதலைப் போரின் வெற்றிக்காக...