இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் சரி, பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரிஎதையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தற்போது தேர்தல் தொடர்பான செய்திகள் பரவலாக பேசப்பட்டு வரும் இந்தக்காலகட்டத்தில் தேர்தல்தொடர்பாக கருத்துக் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டிலே எப்போது எந்தத்தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினராகிய நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். எந்த நேரத்தில் எவ்வாறான முடிவினைஎடுக்க வேண்டும் என்பதனை எமது தலைமை முடிவு எடுக்கும். அது  தமிழ்மக்களை மையப்படுத்தியதாகவேஅமையும். நாங்கள் பல தேர்தல் களத்தினை கண்டவர்கள் எமது மக்கள் எம்முடன் இன்று நேற்றல்ல பல தசாப்தங்களாகஇருந்து அனைத்து தேர்தல்களிலும் எம்மை வெற்றி பெறச்செய்தவர்கள் என்பதுதான் வரலாறு. அதேபோன்றுதான் இனிவரும் தேர்தல்கள் எதுவாக இருந்தாலும் அதிலும் எம்மக்கள் எம்முடன் இருந்து செயற்பட்டு எமதுகட்சியை வெற்றி பெறச்செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் எமக்கில்லை.   அரசாங்கம் எந்தளவிற்காவது தமிழர்களது பலத்தினை குறைக்க வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கில்பணத்தினை அள்ளி கொட்டி தமிழர்கள் என்று கூறிக்கொண்டு அரசாங்கத்துடன் தங்களது சுகபோகத்திற்காகஇருப்பவர்களை களத்தில் இறக்கி, எமது தமிழ் மக்களின் வாக்குகளை சூரையாட நினைப்பதுதான்காலாகாலமாக நடந்து வரும் செயற்பாடாகும்.   அந்த வகையிலே தான் தேர்தலை இலக்கு வைத்து வட, கிழக்கில் பலர் இறக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்தவகையிலே மட்டக்களப்பிலே அமைப்பாளர்கள் என்றும், அமைச்சர்கள் என்றும் பலர் மக்களின்வரிப்பணத்தினைக்கொண்டு வந்து பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.   எமது மக்கள் வெறுமனே நீண்டு நிலைக்காத அபிவிருத்திக்காக ஆசைப்பட்டவர்கள் அல்ல. மாறாக அனைத்துஉரிமைகளுடனும் கூடிய நிரந்தர அபிவிருத்தியை எதிர்பார்த்து ஏங்கி நிற்பவர்கள். அவர்களுக்கான நிரந்தரஇறுதித்தீர்வு கிடைக்கும் வரை எமது கட்சி அவர்களுக்காகவே களத்தில் நின்று போராடும்.   ஒவ்வொரு தமிழனும் தன்மானத்துடன் இந்த நாட்டிலே வாழ வேண்டும் அதற்காகத் தான் 65 வருடங்களாக பலதியாகங்களை செய்திருக்கின்றோம் அந்தத் தியாகங்களுக்கான தீர்வு தொலைவில் இல்லை. நிச்சயமாக எமதுவிடுதலைப்பயணம் தற்போது சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த சூழலில் தான் தமிழ்த் தேசியகூட்டமைப்பு எடுக்கும் முடிவுக்குப் பின்னால் அனைத்து தமிழர்களும் அணிதிரள வேண்டும்.   இவர்களது வேலைத்திட்டங்களுக்கு விலை போகாதவர்களாகவும் தமது இனத்தின் விடுதலையினை என்றும்மதித்து செயற்பட்டவர்களாகவும் எமது தமிழ் இனம் தொடர்ந்து இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். (தில்லை)
மஹிந்தவை காட்டுமிராண்டியென ஒப்பிட்டு பேசிய வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம். நேற்றைய வடமாகாணசபையின் அமர்வில் முள்ளிவாய்க்காலில் நடந்து வரும் நில சுவீகரிப்பு தொடர்பாக சிவாஜிலிங்கம் பேசிக்கொண்டிருக்;கையில் இது தொடர்பில் மஹிந்தவுடனோ கோத்தாவுடனோ பேசலாமெயென சில உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர். இதற்கு பதிலளித்த சிவாஜிலிங்கம் காட்டுமிராண்டிகளுடன் என்னால் பேசமுடியாதென தெரிவித்தார். அவ்வேளையிலேயே குறுக்கிட்ட அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இவ்வவையில் இவ்வாறு சொற்பிரயோககங்களைப் பயன்படுத்த முடியாதென தெரிவித்து சீற்றமடைந்தார். எனினும்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் வழங்க அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய இந்த நிதி வழங்கப்படவுள்ளதாகவும் இந்நிதியைக் கொண்டு, பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் மும்முனை போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ளதாக கூறப்படும் ஜனாதிபதித் தேர்தல் மும்முனை...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட தயாராக வருகின்றன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் தரப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இது தொடர்பாக பேச்சு நடத்தியுள்ளதக...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் புரிந்துணர்வு உடன்படிக்கை!   கைச்சாத்திட தயாராக வருகின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட தயாராக வருகின்றன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் தரப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும்...
ஜனாதிபதியை வரவேற்க நீங்கள் அனைவரும் வருகை தந்தால் மட்டுமே உங்களுக்கு ஆசிரியர் சேவை தரம்-3-ஐஐ வழங்கப்படும் எனக் கூறி வன்னி ஆசிரிய உதவியாளர்களை மிரட்டும் அமைச்சர் டக்ளஸ். வடமாகாண முதலமைச்சரை முட்டாள் என்றும் கூறினார். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிலுநர்களாகவுள்ள வன்னிப் பகுதி ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவை தரம்-3-ஐஐ ஐ யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூலம் தான் பெற்றுத் தருவதாகக் கூறி ஆசிரிய உதவியாளர்கள்...
  தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை பாதுகாப்பதற்கு ஜீ.ஜீ.பொன்னம்பலம் செயற்பட்டதைப் போன்று, ஜெயலலிதா ஜெயராமை பாதுகாக்க ராம் ஜெத்மாலினி தவறி விட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று  தகவல் வெளியிட்டுள்ளது. கருணாநிதி எதிர்கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழங்கிலிருந்து இலங்கையின் சட்டத்தரணியும் அனைத்திலங்கை தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகருமான ஜீ.ஜீ.பொன்னம்பலம் காப்பாற்றியிருந்தார். ஜெயலலிதா ஜெயராம் முகம்கொடுத்துள்ள சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டை போன்று, கருணாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக சர்காரியா தலைமையிலான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது. இதில்...
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வரும் விலை குறைப்பு நிகழ்ச்சி நிரலில் அடுத்தாக கோதுமை மாவின் விலை குறைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று பிரிமா நிறுவனம் மற்றும் இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரிதொரு நிறுவனத்துடன் நடத்தப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலையை 20 வீதமாக குறைக்க இணங்க வேண்டுமாயின் தமது நிறுவனத்திற்கு வேறு வர்த்தக நடவடிக்கைகளுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்...
  கர்நாடகாவுக்கு சுற்றுலா வருபவர்கள் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் இப்போது பரப்பன அக்ரஹாராவும் சேர்ந்திருக்கிறது. ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் சிறையைப் பார்க்க வேண்டும்என்பதற்காக டிராவல்ஸ் பஸ்கள் பரப்பன அக்ரஹாரா பக்கம் ஒரு ரவுண்ட் வந்து திரும்புகிறது. இங்கதான் அம்மாவை புடிச்சு வெச்சுருக்காங்க...'' என்று சொல்லி பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் செல்லும் சாலையை வேடிக்கை பார்த்தபடியே டிராவல்ஸ் பஸ்ஸில் ஏறி கிளம்புகிறது ஒரு கூட்டம். தர்மபுரி பக்கமிருந்து மைசூருக்கு சுற்றுலா வந்த கிராமத்து...
சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் இதனைத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அடிக்கடி வடக்கில் மறைந்துள்ள புலிகள் தகவல்களை வழங்கி வருகின்றனர். போர் முடிந்து விட்டது புலிகள் இல்லை என சிலர் குறிப்பிடுகின்றனர். அப்படி என்றால் படையினருக்கு எதிராக அறிக்கைகளை அனுப்பி வைப்பது பேய்களா? புலிகளின் பிரச்சாரப் பணிகளுடன் தொடர்புடைய பலர் வடக்கில் இருக்கின்றார்கள். சந்தர்ப்பம் வரும் வரையில் காத்திருந்து தகவல்களை அனுப்பி வைக்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்...