hare சில நாட்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் கூறிய கருத்து ஒன்று திரையுலகத்தினர் மட்டுமில்லாமல் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமணத்திற்கு முன் எனக்கு குழந்தை வேண்டும் என்று அவர் கூறியதாக பலர் கூற தற்போது அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நடந்த பூஜை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் நிருபர் ஒருவர் இது குறித்து கேட்ட போது உடனே ‘ நான் அப்படி தான் சொல்லவே இல்லங்க, நீங்க வேற’ என்று பதறி கொண்டு...
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியா நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் என்ற உயிர்க் கொல்லி நோய் கடுமையாக பரவி வருகிறது. இங்கு எபோலா நோய்க்கு இதுவரை 3500 பேர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்படாததால் பேரழிவு நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொற்று நோய் என்பதால் பல நாடுகள் லைபீரியா, சியாரா லியோன் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான...
தாய்லாந்து நாட்டு மன்னரான புமிபால் அதுல்யடேஜ் அந்நாட்டில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவரது பித்தப்பை நேற்றிரவு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக மன்னரின் அரண்மனை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஐந்தாம் தேதியன்று மன்னரின் வயிற்றுப்பகுதியை எக்ஸ்-ரே எடுத்துபார்த்தபோது அவரது பித்தப்பை வீங்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். நேற்றிரவு 9.45 மணியளவில் மன்னரின் வயிற்றுக்குள் கேமராவை அனுப்பிய மருத்துவர்கள் பின்னர் பித்தப்பையை வெற்றிகரமாக அகற்றினர். 20 நிமிடத்தில் அறுவை சிகிச்சை...
விண்ணில் பறந்து எதிரிகளின் இலக்கை உளவு பார்க்கவும், குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா ஆளில்லாமல் இயங்கும் டிரோன்களை (ஆளில்லா விமானங்களை) தயாரித்துள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதிகள் மீது குண்டு வீசப்படுகிறது. அதே போன்று தற்போது கடலில் பாய்ந்து நீந்த கூடிய ஆளில்லா அதிநவீன ரோபோ படகுகளை தயாரித்துள்ளது. இவற்றில் எதிரி கப்பல்களை தாக்கும் திறன் படைத்த ஆயுதங்கள் உள்ளன. இந்த...
ஆணும், பெண்ணும் இணைந்து திருமணம் செய்து கொள்கின்றனர். அதே நேரத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் என்றழைக்கப்படும் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களும் திருமணம் என்ற பெயரில் இணைந்து வாழ்கின்றனர். ஆனால் இன்று முற்றிலும் மாறுபட்ட ஒரு பெண் இங்கிலாந்தில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். அவரது பெயர் கிரேஸ் ஹெல்டர். போட்டோ கிராபரான இவருக்கு வேறு ஒரு ஆணுடனோ, அல்லது பெண்ணுடனோ திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை....
மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமான ஜமாத்-உத்-தாவா தீவிரவாத இயக்கத்துக்கு குர்பானி தோல் வழங்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. மும்பை நகரின் மீது கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 10 தீவிரவாதிகள் உள்பட 164 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் சயீத் தலைமையிலான ஜமாத்-உத்-தாவா தீவிரவாத இயக்கம் தான் காரணம் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையின்போது ‘குர்பானி’க்காக பலியிடும் ஆடு, மாடு, ஒட்டகம்...
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இமயமலையில் உள்ள சியாச்சின் பனிசூழ்ந்த பகுதி ஆகும். இதுதான் உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள போர்க்களம் என்று கருதப்படுகிறது. குளிர்காலத்தில் சில சமயங்களில் இங்கு மைனஸ் 50 டிகிரி குளிர் நிலவும். இந்த பகுதியில் இரு நாடுகளின் படைகளும் உள்ளன. அந்த பகுதியின் பாதுகாப்புக்காக இரு நாடுகளுமே அதிக அளவில் பணம் செலவிட வேண்டி உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி இங்குள்ள...
சிரியாவில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் தலையை துண்டித்து படுகொலை செய்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்க பத்திரிகை நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப், இங்கிலாந்து தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸ் என 3 பேரை தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்து, வீடியோ வெளியிட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். கடைசியாக, கடந்த 3-ந் தேதி இங்கிலாந்து பிணைக்கைதியான டாக்சி...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆசஸ் தொடரில் இங்கிலாந்து 0–5 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. இதனால் இங்கிலாந்து அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கு பலிகடாவாக கெவின் பீட்டர்சன் நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு காரணம் பயிற்சியாளர் ஆன்டிபிளவர் கேப்டன் குக் என்று தகவல் வெளியானது. அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவர் டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் அளித்த பேட்டியில் பயிற்சியாளர் ஆன்டி பிளவர், விக்கெட் கீப்பர்...
 அஜித் திரையுலகத்தில் தனக்கென்று ஒரு தனித்துவத்தை பின்பற்றுபவர். தமிழ் சினிமாவில் வளரும் கலைஞர்கள் பலருக்கும், முன்னுதாரணமாக இருந்து வருபவர். இந்நிலையில் நடிகர் ஜீவா சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ நானும் அஜித்தும் ஒரு நாள் பேருந்தில் வந்து கொண்டிருந்தோம், நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும், அஜித் பஸ் ட்ரைவரிடம் சென்று நன்றி என்று கூறிவிட்டு வந்தார்.