பொதுபலசேனாவிற்க்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பகைமை உணர்வை ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய அமைப்புகள் பயன் படுத்துவதற்க்கு அனுமதிக்ககூடாது இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுடில்லியை சேர்ந்த செக்கியுரிட்டி ரிஸ்க் ஏசியா என்ற அமைப்பை சேர்ந்த பிரிகேடியர் பொன்ஸ்லே இதனை தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவிற்க்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பகைமை உணர்வை பயன்படுத்தி  முஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாத மயப்படுத்தப்படுவதை தடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இதனை தடுக்காவிட்டால் அது ஐ.எஸ்.ஐ.எஸ் இலங்கைக்குள்...
பொலிஸ் திணைக்களத்தில் கடுமையான அரசியல் தலையீடுகள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். பொலிஸ்மா அதிபர் நேர்மையான அதிகாரி என்ற போதிலும் அவரினால் கடமைகளை சுயாதீனமான முறையில் மேற்கொள்ள முடியவில்லை. ஆளும் கட்சியினர் தேவையற்ற விதத்தில் தலையீடு செய்கின்றனர். பொலிஸ் திணைக்களத்தின் நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் உள்ளிட்ட சகல நிர்வாக நடவடிக்கைகளும் அமைச்சு செயலாளரின் தேவைக்கு ஏற்ற வகையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. எதிர்காலத்தில் நடைபெறவுள்ள...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நிராகரிக்குமாறு ஜே.வி.பி யிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுக்க உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட உள்ளார். எனவே ஜே.வி.பி.யின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக ஜே.வி.பி.யிடம் கோரிக்கை விடுக்க உள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமானவர்கள், ஜே.வி.பி தலைவர்...
பாதுகாப்பு படையினர் மக்களின் அன்றாட செயற்பாடுகளின் தொடர்பில் உளவு பார்க்கவில்லை சிலர் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக கிளிநொச்சி பாதுகாப்பு படையனி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த தெரிவிக்கின்றார். பயங்கரவாத செயற்பாடுகள் அரச விரோத நடவடிக்கைகளையே சுற்றி வளைப்பது பாதுகாப்பு பிரிவின் கடமை இதில் சிவில் பிரஜைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இனவாதத்தை தூண்டுவது போன்ற செயற்பாடுகளில் யாராவது செயற்படுகின்றனரா என்பதில் நாங்கள் இன்னும் விழிப்பாக இருக்கின்றோம். மாற்று சிந்தனைக்...
கர்தினால் மல்கம் ரஞ்சித் இனவாதி! பாப்பரசரிடம் செல்லும் தவறான தகவல்கள் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் 2012ல் அமெரிக்காவில் அப்போதைய இராஜாங்கச் செயலாளர் கிலாரி கிளின்டனிடம், இறுதிப் போரில் சில ஆயிரம் தமிழர்களே கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார் என்பது இன்றுவரை ஊடக உலகின் பார்வைக்கு வெளிவராத செய்தி. இவ்வாறு கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா, லங்காசிறி வானொலியில் இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில். ஜனாதிபதி மகிந்தாவுடனான பாப்பரசரின் சந்திப்புக் குறித்து கருத்து வழங்குகையில்...
  இந்திய சிறிலங்கா படைகளின் சதியினை அறிந்து கொண்ட லெப்.கேணல் குமரப்பா அவர்கள் தன்னை அழித்து கொள்வதற்கு முன்னர் தேசியத் தலைவர் அவர்களிற்கு எழுதிய மடல்: கனம் தலைவர் அவர்களுக்கு, குமரப்பா ஆகிய நான் 3.10.87 அன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறிலங்கா கடற்படையால் பருத்தித்துறை கடலுக்கு மேலாக வைத்துக் கைது செய்யப்பட்டேன். பின்பு காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு இந்திய அமைதிப் படையினரின் கண்காணிப்பிலும், இலங்கை...
  தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஜனநாயக வழியில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்கமுடியாது என வடமாகாண முதலமைச்சர் கூறியிருக்கும் கருத்துக்கள், எம்மை வன்முறையாளர்களாக சித்திரிக்கும் முயற்சியா? என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டமைப்பினரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுடனான சந்திப்பு கடந்த புதன்கிழமை நடைபெற்றிருந்தது. இதன்போது கூட்டமைப்பிலுள்ள முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடன் சேர்ந்தியங்கமுடியாது. என முதலமைச்சர் கூறியிருக்கும் கருத்து...
  பூச்சிகளை உயிரோடு துடிக்க துடிக்க உண்ணும் இத் தாவரங்கள் பொதுவாக கண்டல் சூழலில் வாழ்கிறது. தமது நைதரசன் தேவையை நிறைவு செய்துகொள்ள அங்கிகளை பிடித்துண்கிறது.  
யாழ். கலைத்தூது மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நிகழ்வில் சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் 'ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்' என்ற தலைப்பில் நினைவுப் பேருரையாற்றினார் அதன் முழுவிவரம் வருமாறு:- சட்டத்துறையிலும் அரசியலிலும் பிரகாசித்து மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திய பல தலைவர்களை இந்த நாடு கண்டிருக்கிறது. சட்டத்தில் பாண்டித்தியம் பெற்று தங்கள் வாதத்திறமையாலும் வாக்குவன்மையாலும் மக்களைக் கவர்ந்து புகழின்...
வடமாகாண எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் செய்ய இடமளிக்கப்படமாட்டாது. மீறி செய்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் எச்சரித்துள்ளார். அதற்காக எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலும் அவற்றைக் கண்டு பின்வாங்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார். வல்வெட்டித்துறை பகுதியில் இழுவைப்படகு மூலமாக கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியைவழங்குமாறுகோரி நானை திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராத்தில் ஈடுபடவுள்ளனர் என இழுவைப்படகு தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்...