ஆசிரியர்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் பொறுப்புவாய்ந்த தரப்புக்கள் கவனயீனமாக இருப்பதனைக் கண்டித்து நாளை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் சர்வதேச ஆசிரியர் தினமான நாளை யாழ்.நகரில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. மாணவர்களின் ஆளுமையை வளப்படுத்துவது மட்டுமல்லமல், மாணவர்களுடைய எதிர்காலத்திற்கான அத்திபாரத்தையும் இடும் ஆசிரியர்கள் சமகாலத்தில் பல்வேறு விதமான நெருக்குவாரங்களை எதிர் கொள்கின்றார்கள். அவர்களுடைய நலன்கள் தொடர்பில் அரசாங்கமும் பொறுப்புவாய்ந்த தரப்பு க்களும் கவனயீனமாகவே இருக்கின்றனர். எனவே சர்வதேச...
பாரிய அழிவுகள் இடம்பெற்றபோது அதனை தடுத்து நிறுத்தியிருந்தால் இன்று சர்வதேச விசாரணை பொறிமுறையொன்று தேவையற்றதாக இருந்திருக்குமென தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் எஸ்.துஸ்யந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய முன்னணியின் வவுனியா அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இன்று சர்வதேச பொறிமுறை என்பதனை நாம் எமது பார்வையில் எடுத்துக்கொள்ளும் போது யுத்தம் இடம்பெற்று மனித அழிவுகள்,...
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 27வது கூட்டத் தொடர், புதிய மனித உரிமை ஆணையாளர் இளவரசர் சியாட் றசாட் அல் ஹுசைனின் பங்களிப்புடன் நடந்து முடிந்தது. வழமைபோல், பல நாடுகளில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஆழமாக ஆரயப்பட்டதுடன், அதற்கான கண்டன உரைகளுடன், கண்டனப் பிரேரணைகளும், மனித உரிமை சபையினால் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் சிரியா, ஈராக், இஸ்ரேல்-பாலஸ்தீனம், சிறிலங்கா, சூடான், தென் சூடான், உக்ரைன், கொங்கோ...
நெடுங்கேணி பிரதேச கிராம மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகளை வழங்கி உரையாற்றும் போதே “எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நடக்கும் காலம் விரைவில் வரும்” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த பட்டிக்குடியிருப்பு, துவரங்குளம், கற்குளம், மாமடு, முத்துமாரி நகர், கனகராயன்குளம், புத்தூர்சந்தி, மன்னகுளம், கொல்லர் புளியங்குளம்,...
சிரியாவில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து பிணைக்கைதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் சிறை பிடித்துள்ளனர். இவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அந்நாடுகளை மிரட்டுவதற்காக பிணைக் கைதியின் தலையை துண்டித்து படுகொலை செய்கின்றனர். கடந்த மாதம் அமெரிக்கா பத்திரிகை அதிபர் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் கோட்லாப் மற்றும் இங்கிலாந்து சமூக சேவகர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகியோரை தலை துண்டித்து கொன்றனர். இவர்களை தொடர்ந்து மற்றொரு இங்கிலாந்து பிணைக் கைதி ஆலன் ஹென்னிங்ஸ் என்பவரையும் சமீபத்தில்...
இங்கிலாந்தை சேர்ந்தவர் டேவிட் போலம். இவர் லிபியாவில் பெங்காசியில் உள்ள சர்வதேச பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இவர் தனது மனைவி சியோயினுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் மார்க்கெட் சென்ற அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை பிணைக் கைதியாக பிடித்த தீவிரவாதிகள் அவர் குறித்த வீடியோவை கடந்த ஆகஸ்டு 28–ந் திகதி வெளியிட்டனர். அதில் அவர் பிரதமர் டேவிட் கேமரூனிடம் தன்னை காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் பிணைக்...
வடஅமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் இன்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இங்குள்ள வெராக்ருஷ் மாகாணத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். தொடக்கத்தில் இங்கு 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் 5.4 ரிக்டர் என உறுதி செய்யப்பட்டது. வெராக்ருஷ் மாகாணத்தில் சயுலாடி அலீமன் என்ற இடத்தில் இருந்து...
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி நாடு உருவாக்கியுள்ளனர். அவர்களின் ஆதிக்கத்தை தடுத்து அழிப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகள் கூட்டணியாக ஈடுபட்டுள்ளன. இவர்களின் நிலைகளின் மீது குண்டு வீசி அழித்து வருகின்றனர். அதனால் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் வகையில் அவர்களுக்கு பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள் கூட்டணி அமைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தலிபான் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் ஷாகி துல்லா...
சீனா விண்வெளி, போக்குவரத்து மற்றும் அணு ஆயுதம் உள்ளிட்ட பல துறைகளில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. பல ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது டாங்பெங், 31 பி என்ற அதி சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ளது. இது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது. இது 10 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை குறி பார்த்து தாக்க கூடியது. இதன்...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் எல்லைப் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ள பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத் தளபதியும், முன்னாள் அதிபருமான பர்வேஸ் முஷரப், ‘பாகிஸ்தானின் பொறுமையை சோதிப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக கருத்து கூறிய அவர், தற்போது பாகிஸ்தானில் நிலவி வரும் அரசு...