இலங்கை இறுதிக்கட்ட போரின் போது விடுதலை புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன்,தளபதி புலித்தேவன், கேனல் ரமேஷ் உள்ளிட்டோர் சிங்கள ராணுவத்திடம் சரண் அடைந்தனர்.அவர்கள் அனைவரையும் சிங்கள படையினர் சித்ரவதை செய்து பின்னர் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக புதிய ஆதாரங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள அரசு சாரா நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதிக்கட்ட போரின் போது அங்கிருந்த தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவரும், ஆசிரியர் ஒருவரும்...
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நாளை கிளிநொச்சியில் தனது விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனோரைக் கண்டறியும் பொருட்டு ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். வடக்கு, கிழக்கு, தென்னிலங்கை என்று நாட்டின் பல பகுதிகளில் இந்த ஆணைக்குழு தனது விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. எனினும் வவுனியா மாவட்டத்தில் மட்டும் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெறவில்லை. இந்நிலையில் நாளை தொடக்கம் 30ம் திகதி இந்த ஆணைக்குழுவினர் தங்களது விசாரணைகளை கிளிநொச்சி மற்றும்...
இஸ்லாமிற்கு எதிரான கருத்தை வெளியிட்டதாக ஈராக்கை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.ஈராக்கை சேர்ந்த சமிர் சலி அல்-நுடாமி (Sameera Salih Ali al-Nuaimy) என்ற பெண் வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் பேஸ்புக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மொசூல் (Mosul) பகுதியில் உள்ள சமய அடையாளங்களை அழிக்கிறார்கள் என தகவல் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், அவரை...
  ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 27 ஆவது கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர். அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையிலேயே மேற்படி விடயம் தொடர்பாக அவர் கவலை வெளியிட்டார். அங்கு அவர் இன்று வியாழக்கிழமை கூறியவை வருமாறு:- ஐக்கிய நாடுகளின்...
. இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் பொதுச் செயலாளர் ஐயாட் அமீன் மதானியை இன்று சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடைநடுவில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் பொதுச் செயலாளராக மதானி நியமிக்கப்பட்டமையின் ஊடாக, இஸ்லாமிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும். இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தடுக்கப்படும். என்னுடைய சொந்த சகோதரர்களைப் போன்றே முஸ்லிம்களை நடத்துவேன். முஸ்லிம்...
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சார்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை தொடர்பான விசாரணையின் வாய்மொழி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நாவின் பிரதி மனித உரிமை ஆணையாளர் ஃலேவியா பின்சேய்ரி கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் அவர் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார். பிரதி ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலளித்து...
  கொழும்பு-03, கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டு பெண்கள் அறுவரையும் நாடுகடத்துமாறு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதியில் வைத்தே தாய்லாந்து பெண்கள் அறுவரும் இலங்கைப்பெண்கள் இருவரும் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். இந்த எட்டுபெண்களையும் தலா 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட கோட்டை...
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரான்ஸில் வாழும் பெண்ணொருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக பொது உறவுகள் மற்றும் பொது விவகார அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அந்த பெண்ணுக்காக அவர் ராஜகிரிய பிரதேசத்தில் வீடொன்றை கொள்வனவு செய்துள்ளார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். பத்திரிகை ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஞானசார தேரர் போன்றவர்கள் ஜனாதிபதி அல்லது நாட்டின் மரியாதைக்குரிய பதவிகளுக்கு மக்கள்...
    கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த 3ம் திகதி ஆரம்பமான நீர்க்காகம் போர் பயிற்சிகளில் எதிரிகளின் இறுதி முகாம்களை அழிக்கும் பயிற்சிகள் நேற்றும் இன்றும் நடைபெற்றன. இராணுவத்தின் கொமாண்டோ மற்றும் விசேட அதிரடிப்படையில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் உள்ள எதிரிகளின் முகாம்களை அழிக்கும் இறுதித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டனர். இதனடிப்படையில், கொமாண்டோ படையினர் நேற்று மாலை மட்டக்களப்பு புன்னக்குடாவில் எதிரியின் இறுதி முகாமை அழிக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர். இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் இன்று...