இனவழிப்பில் இருந்து தமிழ் மக்களை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களது இன அடையாளத்தைப் பேணுவதற்கும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை வலியுறுத்திய பொங்குதமிழ் பிரகடனம் , ஈழத்தமிழ் மக்களது பொதுசன வாக்கெடுப்புக்கான சனநாயக உரிமையினையும் அனைத்துலக சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஐ.நா உரைக்கு எதிர்ப்பும் தெரிவித்தும், தமிழர்களுக்கான பரிகார நீதியினைக் கோரியும், நியூயோர்க் ஐ.நா பொதுச்சபை முன் இடம்பெற்றிருந்த பொங்குதமிழ் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வின் பிரகடனத்திலேயே இந்த...
முன்னாள் சட்ட விரிவுரையாளர் தம்பு கனகசபையால் எழுதப்பட்ட “மகாவம்சம் ஒரு மீளாய்வு” என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 19ம் திகதி கனடாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் ஆதரவில் ஸ்காபுறோ பொது மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு நக்கீரன் தங்கவேலு தலைமை தாங்கினார். தமிழ்நாடு காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.ப. பாலசுப்பிரமணியம் இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வருகை தந்திருந்தார். நூல் வெளியீட்டு விழாவில்...
  ஐ.நா பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபச்ச உரையாற்றுவதற்கு சிலமணி நேரம் உள்ள நிலையில், வட அமெரிக்கத் தமிழர்கள் பொங்குதமிழ் எழுச்சியோடு ஐ.நா முன் அணிதிரளத் தொடங்கிவிட்டனர். சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஐ.நா உரைக்கு எதிர்ப்பும் தெரிவித்தும், தமிழர்களுக்கான பரிகார நீதியினைக் கோரியும் இப்பொங்குதமிழ் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கனடாவில் இருந்து பேருந்துகள் மூலமும், அமெரிக்காவின் பிற...
ஐ.நா. பொதுக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நியூயோர்க்கில் வைத்து இன்று உலக நாடுகளின் தலைவர்கள் பலரையும் சந்தித்திருக்கிறார். ஜனாதிபதி, நேபாள பிரதம அமைச்சர் சுசில் கொய்ரால, கொலம்பியன் ஜனாதிபதி ஜூவான் மனுவெல் சந்தோஷ் கால்டெரன் மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோரைச் சந்தித்தார். ஜனாதிபதி ராஜபக்ஷவும் நேபாள பிரதம அமைச்சர் கொய்ராலவும் எதிர்வரும் சார்க் உச்சி மகாநாடு உள்ளிட்ட பரஸ்பர...
சிங்களப் பெரும்பான்மையினர், பௌத்தம் வடக்கு கிழக்கில் நிலைபெற்றிருந்ததால் இங்கு வாழ்ந்த மக்கள் சிங்களமக்கள் தான் என்றும் தமிழர்கள் இந்தியாவில் இருந்து பின்னைய காலத்தில் வந்து சிங்கள மக்களை விரட்டி விட்டார்கள் என்றும் திரிபுபடுத்தி ஒரு வாதத்தை முன்வைக்கின்றார்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுன்னாகம் ஸ்கந்தவரக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நாவலர் சிலை நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும்...
  கிட்டுவின் உயிர்த் தியாகத்தையொட்டி, 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 20-ம் தேதி வரை, மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்டன.கிட்டு கப்பலில் வருவது மாத்தையாவால்தான் இந்திய உளவுப் பிரிவுக்குத் தெரியவந்தது என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. எனவே யாழ்ப்பாணத்தில் அனுசரிக்கப்பட்ட அஞ்சலிக் கூட்டத்தில் மாத்தையா கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து அடேல் பாலசிங்கம் எழுதிய நூலில், 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள், கொக்குவில் பகுதியில் உள்ள...
  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் உதவித் தலைவராக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக ஹரின்பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ணவும் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரவும்...
“‘இலங்கை ஆண்களில் பத்தில் ஒருவர் தமது வாழ்வில் ஒரு தடவையாவது பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்.” இதுதான் இந்த வாரத்தின் மிகவும் சுவார்ஸமான செய்தி எனலாம்.   எமது ஆண்களின் வக்கிரத் தன்மையையும் பெண்களின் உணர்வை மதிக்காத மேலாதிக்க உணர்வையும் காட்டுகிறது என்று சொல்லிவிட்டு மறக்கக் கூடிய விடயம் அல்ல. இதன் பின்னாலுள்ள ஆபத்துக்கள் எண்ணிலடங்காதவை. சமூகத்தால் ஏளனப்படுத்தல், ஒதுக்கி வைக்கப்படுத்தல், பாலியல் தொற்று நோய், மன விரக்தி...
கிளிநொச்சி ஆனையிறவில் தமிழ்மக்களின் பூர்வீக நிலத்தை இராணுப்படைத்தளம் அமைப்பதற்காக கிளிநொச்சி மாவட்ட நிலம் சுவீகரித்தல் அதிகாரியின் உத்தரவிற்கு அமைய இன்று காலை நிலஅளவை திணைக்களம் அளக்க முயன்றபோது பொது மக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது. குறித்த இடத்திற்கு காணிக்கான உரிமை ஆவணங்களுடன் வந்த காணி உரிமையாளர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரநிதிகளும் அளவீடு செய்வதை தடுத்து நிறுத்த முயன்றபோது அங்கு இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகியன பிரசன்னமாகின. இந்த நிலையில்...
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்காவும், அதன் அரபு கூட்டாளிகளும் வான்வழி தாக்குதல் நடத்தின. இதில் தீவிரவாதிகள் பலர் பலியாயினர். பாரசீக வளைகுடா மற்றும் செங்கடலில் இருந்து அமெரிக்க ராணுவம் ஏவுகணைகளை வீசியுள்ளது. ஈராக், சிரியாவில் முக்கிய நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அதுமட்டுமின்றி இஸ்லாமிய தேசம் என்ற நாட்டினையும் அவர்கள் பிரகடனம் செய்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் பிணைய கைதியாக சிக்கியுள்ளவர்களை தலையை துண்டித்து கொன்று வருகின்றனர்....