பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் நேற்று திங்கட்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக அரச புலனாய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குறித்த பணிப்பாளரான ஜோன் ஸ்டெவார்ட் பிரான்ஸிஸ், கொழும்பு, வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளதாகவும், விடுமுறையைக் கழிப்பதற்கு, அவரது மனைவியுடன் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவரது மனைவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2013ம் ஆண்டு இலங்கைக்கு வந்த இவர் பாதுகாப்பு காரணங்களுக்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க...
இலங்கையில் பொறுப்புக்கூறல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் கோரியுள்ளது. இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து நேற்று மனித உரிமைகள் அமர்வில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய பொறுப்புக்கூறல் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாய்மூல அறிக்கை நாளையதினம் உத்தியோகபூர்வமாக அமர்வின்போது அறிவிக்கப்படவுள்ளது என்றும் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், மீள்குடியேற்றம்...
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க் சென்றடைந்துள்ளார். இலங்கை ஜனாதிபதி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. நியூயோர்க் சென்றடைந்த ஜனாதிபதி, அவரின் பாரியார் உட்பட்ட பிரதிநிதிகளை அங்குள்ள இலங்கை பிரதிநிதிகளான பாலித கோஹன, பிரசாத் காரியவசம் மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் வரவேற்றனர். ஐக்கிய நாடுகளின் 69வது அமர்வில் பங்கேற்க சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஒரு வாரக்காலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். நாளை அவர்...
இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தனியான நாட்டை அமைப்பதற்கான குறிக்கோள்களை கொண்டிருக்கவில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சி நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இன்று உயர்நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசியின் மூலம் இந்த உறுதியுரையை வழங்கினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியான அரசாங்கத்தை அமைக்கும் அரசியல் நோக்கத்தை கொண்டிருக்கிறது என்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் மீதே இந்த சத்தியக்கடதாசி இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இன்று இந்த...
  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழான 13ஆவது சட்டத் திருத்தம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதிலும், அதன் அடிப்படையில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பீ.முரளீதர் ராவ். நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் உயர்மட்ட குழுவினருடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு...
  ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருந்த பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் இருவர் இன்று திங்கட்கிழமை மாலை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் பா.ஜ.க. தேசிய செயலாளர் பி.முரளிதர் ராவ் மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான விஜய் ஜாலி ஆகியோரும் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பு...
அரசாங்கம் தனக்கு தொடர்ச்சியாக அநீதி இழைத்துக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் நல்லுறவு அமைச்சர் மேர்வின் சில்வா பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக எனக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கின்றது. நானும் எவ்வளவு காலத்துக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும்? மிக விரைவில் நான் இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். ஜனாதிபதி மிகவும் நல்லவர், அவர் எனக்கு எந்தவித அநீதியும்...
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதை கண்டித்து தமிழர்கள் நியூயோர்க்கில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பேரணி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியில் எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ள...
  இராணுவத் தேவைக்காக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் ஆரம்பித்த இப்போராட்டம் பிரதேச சபையில் முடிவடைந்தது. இராணுவமே வெளியேறு, எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும், எங்கள் வீடு எங்களுக்கு வேண்டும், அபிவிருத்திகள், இழப்பீடுகள் வேண்டாம் காணமால் போன உறவுகளுக்கு முதலில் பதில் சொல் ஐக்கிய நாடுகள் சபையே எங்களை நிம்மதியாக வாழ...
  சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கை ஓங்கி வரும் நிலையில் குர்து இன மக்கள் துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார்கள்.இந்த தீவிரவாதிகள் சிரியாவின் வடக்கு பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி, முன்னேறி வருகிறார்கள். அவர்கள் துருக்கி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஏராளமான கிராமங்களை கைப்பற்றி உள்ளனர். அடுத்த கட்டமாக அவர்கள் எல்லை நகரமான கொபானி...