நியூசிலாந்து அணியில் சகலதுறை வீரராக வலம் வந்த கிறிஸ் கெயின்ஸ், தற்போது பஸ் நிலையத்தை சுத்தம் செய்து வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் கிறிஸ் கெயின்ஸ், 1989ல் அணியில் வருகை தந்து 2004ல் ஓய்வு பெற்றார். பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் அசத்தும் கெயின்ஸ் அணியை விட்டு ஓய்வு பெறும் போது நட்சத்திர வீரராக விடைகொடுத்தார்.
உலகத்தின் சிறந்த சகலதுறை வீரர்...
டோக்கியோ : பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் அனா இவானோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கியுடன் (டென்மார்க்) நேற்று மோதிய இவானோவிச் 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் வோஸ்னியாக்கி கடும் நெருக்கடி கொடுத்ததால், ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.ஒரு மணி, 39 நிமிடம் நடந்த இப்போட்டியில்...
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா), லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லாகூர் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அகமது ஷேசாத் 59 ரன்களும், உமர் அக்மல் 40 ரன்களும் விளாசினர். லாகூரின் ரன்வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 9...
உலகில் மாற்றங்களை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடும் இளைஞர்களின் ஆற்றலை இனங்கண்டு, 'யங் லீடர் ஆப் டுமாரோ' (நாளைய இளம் தலைவர்) என்ற பட்டியலில் அவர்களின் பெயர்களை பிரபல அமெரிக்க பத்திரிகையான, 'டைம்ஸ்' வெளியிட்டு வருகின்றது.
இவ்வாண்டு வெளியிடப்பட்ட இப்பட்டியலில் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், 'ஆர்கிடெக்ட்' (கட்டுமானத்துறை) பட்டம் பெற்றுள்ள இந்திய இளைஞரான அலோக் ஷெட்டியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
மழை, வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குடிசைப் பகுதி மக்கள் பயனடையத்தக்க வகையில்...
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள் 2 லட்சம் டாலருக்கு ஏலத்தின் மூலம் விற்பனையாகியுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபரான ஜான் எப். கென்னடி, 1943-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பணியாற்றியபோது, தனது போர்க் கப்பலில் உடன் பணியாற்றிவந்த அமெரிக்க வீரர் ஹரோல்ட் மார்னி-யின் மரணத்ததுக்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தாருக்கு சில கடிதங்களை எழுதியிருந்தார்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு ஏல நிறுவனம் இந்த கடிதங்களை சமீபத்தில்...
தலிபான்களின் தாயகமாக விளங்கிவந்த ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் பாதுகாப்புடன் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் முதல் சுற்று முடிவின்போது அப்துல்லா அப்துல்லா முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்பட்டார்.
இரண்டாவது சுற்று எண்ணிக்கை முடிவடைந்து ஜூன் மாதம் வெளிவந்த அறிவிப்பில் மற்றொரு வேட்பாளரான அஷ்ரப் கனி முன்னிலையில் இருந்தார். இதனை ஏற்றுக்கொள்ள அப்துல்லா அப்துல்லா மறுத்ததால், தேர்தல்...
சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் ரஷ்யாவை விட அமெரிக்க மின் உலைகளே உலகில் அதிக அளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அடுத்த வாரம் ஐ.நா.வின் பருவநிலை மாநாடு நியூயார்க் நகரில் நடைபெற உள்ள நிலையில், எலிசபெத் அவுட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின்படி, 2012-ஆம் ஆண்டு அமெரிக்க மின் உலைகள் 6 சதவீதத்திற்கும் அதிகமாக கார்பனை உமிழ்ந்துள்ளது. அது மற்ற எந்த நாடுகளிலும்...
மேக் அப் போட்டு சோர்ந்துபோனார் பார்வதி.‘பூ, ‘மரியான், ‘சென்னையில் ஒரு நாள் படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. அவர் கூறியது:நான் நடிக்கும் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் அதிக இடைவெளி இருப்பது ஏன் என்கிறார்கள். அதற்கு காரணம் மனதுக்கு பிடித்த வேடங்களை மட்டுமே ஏற்பதுதான். வரும் படங்கள் எல்லாவற்றையும் நான் ஏற்பதில்லை. ஏற்கும் வேடங்களுக்கு அப்பால் தனிப்பட்ட முறையில் என் எண்ணப்படி வாழ்வதுதான் எனக்கு பிடிக்கும். ஒவ்வொரு முறை மேக்...
திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட திட்டமிட்டிருக்கிறார் அனுஷ்கா.தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. ரஜினி ஜோடியாக ‘லிங்கா, அஜீத் ஜோடியாக பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடிப்பதுடன் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் ‘பாஹுபாலி‘, குணசேகர் இயக்கத்தில் ‘ருத்ரம்மாதேவி‘ படங்களில் நடிக்கிறார். இதில் ‘ருத்ரம்மாதேவி‘ ஷூட்டிங் முடிந்தது. ‘லிங்கா‘ ஷூட்டிங் இந்த மாதம் முடிகிறது. இப்படங்களையடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம்.
சமீபத்தில் அனுஷ்காவை சந்தித்த ஒரு இயக்குனர் ஹீரோயினுக்கு...
சென்னை: மருத்துவ கல்லூரி திகில் கதையாக உருவாகிறது ‘நீதான் ராஜா'. இது பற்றி இயக்குனரும், ஹீரோவுமான நிரஞ்சன் கூறியது:தங்கை மீது உயிரை வைத்திருக்கும் அண்ணன் அவளை டாக்டராக்கி பார்க்க ஆசைப்படுகிறான். மருத்துவ கல்லூரியில் தங்கையை சேர்த்து அழகுபார்க்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் கல்லூரியில் நடக்கும் அதிர்ச்சியான சம்பவத்தால் தங்கை பாதிக்கப்படுகிறாள். இதையறிந்து கோபம் அடைந்த அண்ணன் தங்கையை மீட்க எப்படி போராடுகிறான் என்பதை திடுக்கிடும் சம்பவங்களுடன் கதை கூறுகிறது.‘சூறையாடல், ‘கேரள...