வவுனியா, ஓமந்தை பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு பிரதேச சபையால் கோரப்பட்ட காணி, வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதால் அதனை பிரதேச சபைக்கு வழங்கமுடியாது என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். விளையாட்டு மைதானத்துக்கான காணியை வவுனியா பிரதேச செயலாளர் இன்னமும் வழங்கவில்லை என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் க.சிவலிங்கம் நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர்...
  “முடியாது என்று எமக்கு எதுவுமில்லை, மக்கள் எம் மீது முழுமையான நம்பிக்கை கொள்ள முடியும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஊவாவில் ஆட்சியமைக்கலாம் என்று ஐ.தே.க. கனவு காண்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது எனவும் தெரிவித்தார். பதுளை ஹாலிஎலயில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மகளிர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி,“பெண்கள் கட்சிக்கும் நாட்டுக்கும் பெரும் சக்தியாக உள்ளதாகவும், உலகிலேயே பெண்களுக்கு உரிய...
கூட்டமைப்பினர் மோடியை சந்தித்தமையும் அதன் பின்னர் அவர்கள் வெளியிட்ட குழப்பமான அறிக்கைகளையும் காட்டமாக விமர்சித்துள்ளார் சிறீ ரெலோக் கட்சியின் செயலாளர் நாயகமான திரு. ப. உதயராசா. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அப்படியே வருமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைக்கு திரும்பி வந்து பல்வேறு ஊடகங்களுக்கு கொடுத்துள்ள பேட்டிகளும், அறிக்கைகளும் தமிழ் மக்களை ஆழ்ந்த குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனை...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவமதிக்கும் விதத்தில், எமது புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருசிலரினால் கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவமானது இலங்கை அரசுக்கு மகிழ்ச்சியான விடயம் மட்டுமல்ல, இலங்கை அரசை காப்பாற்றும் விடயமாகவும் அமைந்துவிடும். என பா. அரியநேத்திரன் பா.உ. தெரிவித்துள்ளார். தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஜெனிவா ஐ.நா முன்றலில் பல்லாயிரக்கணக்கான எமது புலம்பெயர் மக்களால் மேற்கொள்ளப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் காலத்தின் தேவையான விடயம். ஆனால் அங்குள்ள ஒருசிலரினால் தமிழ்...
இன்று உலகிலேயே மிக அதிகமான உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம், சாலை விபத்து... 1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்... இதனால் தனி மனித இழப்பு, அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு, பொருளாதார இழப்பு போன்றவைகள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றவராகின்றார்கள்... இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று... நாம் ஒவ்வொருவரும் அக்கரை எடுத்து செயல்பட்டால் இதை மாற்றியமைக்க முடியும்... * மிக அதிக வேகம்..... * தலைக்கவசம் அணியாமல் செல்வது.... * மது...
சுமார் மூன்று தசாப்தங்களாக எம் இனத்தை அழித்து வந்த யுத்தத்தை முள்ளி வாய்க்காலுக்குள் முடிவுகண்ட நாளே இது எம் இனத்தின் வாழ்வியலிலிருந்து மறைக்கவோ மறுக்கப்படவோ முடியாத ஒரு நாள். நீண்ட ஒரு பாரம்பரியத்தை கொண்டு அமைதியாக வாழ்ந்த தமிழ் மக்களது வாழ்வியலை, இலக்கை அடைய முடியாத, வழி தவறிய போராட்டத்தின் மூலம் உறை நிலைக்குக் கொண்டு சென்ற மறக்க முடியாத நாள் இது. வழிதவறி தடம்புரண்டுபோன எமது போராட்டமானது சொல்லொணா துன்பங்களையும் வாழ்வியலின்...
பேருக்குப் பின்னர் வடக்கில் சிங்கள இராணுவப் புலனாய்வாளர்களின் பாதுகாப்புக் கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கிற்கு விஜயம் செய்கின்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளும் அப்பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வருவதால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதனை வடக்கின் முதலமைச்சர் ஜேர்மன் தூதுவரிடம் யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரியப்படுத்திய பொழுது பதிலுக்கு அவரும் தனக்கும் வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்தாகவும் தன்னுடைய நகர்வுகளையும் பாதுகாப்புத்...
  சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தைந்தார். விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விமான நிலையத்துக்கு சென்று அவரை வரவேற்றார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த அவர், இலங்கையில் தங்கியிருக்கும் போது பல்வேறு அபிவிருத்தி உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. சீன ஜனாதிபதியுடன் அவரது...
வன்முறை அரசியல் ஊடாக அல்லது அரச பயங்கரவாதம் ஊடாக தமிழ் மக்களை அடிபணிய வைக்கும் பேரினவாத சிந்தனையுடன் மகிந்த அரசு இப்போது புதியதொரு அறிவிப்பை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 தமிழ் அமைப்புக்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது. இலங்கைக்கு எதிராக, ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க தீர்மானத்திற்கான...
  நிபுணர் குழு அறிக்கை! ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக என்னால் எந்த விசாரணைக்கும் உத்தரவிட முடியாது. இப்படி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீனமூன் தெரிவித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. அறிக்கை வெளியிட்ட பின்னர் பான் கீ ன மூனின் பேச்சாளர் மார்டின் கொஸ்க்கி நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் கூறியவை வருமாறு: இலங்கை அரசு இணங்கினால்...