மன்னார், சவுத்பார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்களட்கிழமை கரை ஒதுங்கியுள்ளது. சவுத்பார் கடற்படை முகாமிலிருந்து வங்காலை பகுதியை நோக்கிய சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் உருக்குலைந்த நிலையில் ஆடைகள் அற்ற நிலையில் காணப்படுகிறது. இதேவேளை பிரேத பரிசோதனை அதிகாரி ரி.பி.சிந்தாத்துரை, சடலத்தை நேரில் சென்று...
சிங்கள மக்களின் மனமாற்றம் இந்த அரசுக்கு எதிராக இப்போது ஊவாவில் நிகழ்ந்து விட்டது. இங்கு வாழும் முஸ்லிம் சகோதரர்களும் எம்மோடு கரங்கோர்த்து கொண்டுள்ளார்கள். பதுளை மாவட்ட மலைநாட்டு தமிழ் மக்கள் மத்தியிலும் இப்போது இந்த அரசுக்கு எதிரான அலை அடிக்க தொடங்கிவிட்டது இங்கே நகரங்களில் வாழும் மலையக தமிழர்கள் இந்த கொடுங்கோல் அரசை எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்து விட்டார்கள். சிங்கள, முஸ்லிம் மற்றும் நகர வாழ் தமிழ் மக்கள் மத்தியில்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, சிலர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலின் போது பொதுக் கூட்டணி மற்றும் பொதுச் சின்னத்தில் போட்டியிடுமாறு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர், ரணிலுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் உள்ள ராஜபக்ஷவினருக்கு எதிரான அமைச்சர்களுடன் எதிரணி அரசியல்கட்சிகள், வெகுஜன அமைப்புகள் சிலவும் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளன. சஜித் பிரேமதாசவை பிரதித் தலைவராக நியமிக்கும் யோசனை முன்வைக்கப்படும் எதிர்வரும் 23 ஆம்...
எங்கள் ஈழம் இது தமிழீழம் சென்னையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தமிழர் பேரணி!சனி, செப்டம்பர் 13, 2014 - தமிழீழம் | ஆர்த்தி , சென்னை   5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தமிழர் பேரணி! நாள்: செப்டம்பர் 24 பேரணி தொடங்கும் இடம்: இராஜரத்தினம் விளையாட்டரங்கம் எதிரில், எழும்பூர், சென்னை நேரம்: மாலை சரியாக 3 மணி பேரணி நிறைவடையும் இடம்: மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் மாளிகை எதிரில், எழும்பூர், சென்னை. மத்திய அரசை வலியுறுத்தும் 5 அம்ச கோரிக்கைகள் 1....
இங்கு சொல்லப்பட்ட பயிற்சிகள் யாவும் பொதுவானவை. ஒவ்வொருவரின் உடல்வாகு, உடல்நிலை மற்றும் கர்ப்பநிலை உள்ளிட்ட சில காரணங்களைப் பொறுத்துப் பயிற்சிகள் மாறலாம். எனவே மருத்துவரிடம் பரிசோதித்துவிட்டு அவரின் பரிந்துரைக்குப் பின்னரே இதை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு, திடீரென வாந்தி, தலைசுற்றல், மூச்சிரைப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே இந்தப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். கர்ப்பமான நான்காவது மாதத்தின் தொடக்கத்தில் இருந்து உடற்பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். வாரத்தில் ஐந்து நாட்கள்...
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள் மடத்தில் 24 வருடங்களுக்கு முன்பு கருணா குழுவால்  கடத்தி, படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்கள் தொடர்பில் முரண்பாடுகள் எழுந்துள்ளன. இந்த முரண்பாடு காரணமாக நேற்று குறித்த அந்த இடத்தை பார்வையிட்டு, அகழ்வுப் பணிகள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக வருகை தந்திருந்த நிபுணர்கள் குழு எந்தவொரு தீர்மானமும் இன்றி கொழும்பு திரும்பியது. களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த மனிதப் புதைகுழியில்...
இன்னும் ஏன் உறக்கம்? – அளுத்கமை கலவரம் அடுத்த கட்டம்  TPN NEWS  
சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையைச்சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி, விமானப் பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி சென்னையின் முக்கிய இடங்களை படம்பிடித்து அவர், பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி அருண் செல்வராஜன்(28) சென்னை சாலிகிராமத்தில் புதன் கிழமை இரவில் கைது செய்யப்பட்டார். அருண் செல்வராஜின்...
மரண தண்டனை கைதிகளுக்கு பௌத்த மக்களின் புனித தளமாக கருதப்படும் கண்டி தலதா மாளிகையில் வழிபாடுசெய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது நாளை இந்த விசேட வழிபாட்டு நிகழ்வில் கைதிகள் பங்கேற்க உள்ளனர். சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜிதீரவின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த வழிபாட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கைகள் நாளை தலதா மாளிகையில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட நூறு...
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்யுமாறு களுத்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு நீதவான் ஆயேஸா ஆப்தீன் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளார். அளுத்கம தர்கா நகரைச் சேர்ந்த...