ரணில் ஒரு நரி அதை விட மகிந்த பரவாயில்லை-விடுதலைப்புலிகளின் அன்டன் பாலசிங்கம் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை சமாதானம் ழூண்றையும் அரசாங்கம் சரிவர கடைப்பிடிக்க மாட்டாது தலைவர் கூறியதும் அதுதான் கூட்டமைப்பு நினைக்குமா போல் சமஸ்டி ஆட்சியும் எமக்கு தரமாட்டார்கள்.   TPN NEWS    
  இலங்கைக்கு வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குண்டு துளைக்காத காரில் பயணிக்க விரும்பவில்லை என கருதினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை வருகையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாப்பரசர் பிரான்சிஸ் வரும் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 3 நாள் பயணமாக இலங்கை வரும் பாப்பரசர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்....
குருநாகல் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 வயது சிறுமியைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 32 வயதான குடும்பஸ்தரைக் கைது செய்ய பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கடந்த 9ம் திகதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கேஷானி பண்டார என்ற சிறுமி இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்தநிலையில், நேற்று மாலை பொலிஸாருக்கு கிடைத்த அழைப்பினை அடுத்து பொலிஸார், குறித்த...
யாழ்.மாதகல் பிரதேசத்தில் கடற்படை முகாம் மற்றும் பௌத்த விகாரை ஆகியன அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சில தினங்களில் உபகரணங்கள் அனைத்தையும் அகற்றுமாறும் படையினர் உத்தரவு பிறப்பித்திருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறித்த பகுதியில் சம்பில்துறை, திருவடிநிலை ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம் கடற்படையினராலும், விகாரை அமைப்பதற்காகவும் அபகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் நீண்டகாலம் வாழ்ந்த நிலங்களில் குடியேற முடியாமல் காட்டுப்புலம் பகுதியில் குடியேறி...
மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பச்சை விளக்கு சமிக்ஞை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 18வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்து அவர் மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டவாதிகள் பலரும் வாதிடுகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி சட்டத்துறையில் அதியுயர்...
  நியூயோர்க்கில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை ஜனாதிபதியை சந்திப்பாரா என்பது குறித்து புதுடில்லியில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக பொதுநலவாய தலைவர்களின் மாநாடொன்று நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. பொதுநலவாயத்தின் சீர்திருத்த நடவடிக்கைகள் உட்பட பல விடயங்கள் குறித்து விவாதிக்கவுள்ள இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமை தாங்குகிறார். எனினும் இந்திய பிரதமர்...
விடுதலைப் புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவேளை, அவர்கள் அறிவிக்கப்படாத அரசாங்கம் ஒன்றை அங்கே நடத்திவந்தார்கள் என்பது யாவரும் அறிந்த விடையம். அவர்களிடம் நீதிமன்றங்கள் தொடக்கம் வங்கிகள் வரை இயங்கிக்கொண்டு இருந்தது. இதேவேளை புலிகளால் மிகவும் இரகசியமாக பேணப்பட்டு வந்த சிறைச்சாலைகளும் உள்ளது. இதில் அல்ஃபா- 05 மற்றும் அல்ஃபா-02 மிக முக்கியமானவை. குறிப்பாக கொழும்பின் புறநகர்ப் பகுதியான கல்கிசையில் வைத்து ஒரு ஸ்ரீலங்கா புலனாய்வு அதிகாரியை புலிகள்...
  பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் வருகைக்கான ஆரம்ப நடவடிக்கை இன்று இரவு அவரது வீட்டில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின் கோட்டே தொகுதியின் அமைப்பாளராக மாத்திரமல்லாது, கொழும்பு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக அரசியலுக்குள் வருவதற்கே கோத்தபாய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளார். இதன் காரணமாக அவரது அரசியல் வருகை தொடர்பான அறிவிப்பை முதல் முறையாக வெளியிட்டு, கொழும்பு நகரின் அரசியல் குறித்த அக்கறையை கொண்டுள்ள முன்னணி வர்த்தகர்கள்,...
மனச்சாட்சிக்கு விரோதமான அரசியலை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகின்றேன் என இளைஞர் அணி செயலாளர் எஸ். சிவகரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி மாநாடு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தனது பேருரையில் கருத்து தெரிவித்ததாவது, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈழத்தமிழ் தேசிய இனமானது முற்றிலும் வேறுபட்டதும் அநிதியானதுமான இனஅழிப்பு நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. ஆயுத ரீதியிலான யுத்தத்தைவிடவும்...
யாழ் - கொழும்பு சேவையில் வழிதட அனுமதி பத்திரம் இன்றி எந்தவொரு பேருந்தும் சேவையில் ஈடுபட முடியாது. இதை நாம் அனுமதிக்கமாட்டோம் என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.ஜ.விமலசேன தெரிவித்தார். இப்பொழுது நான் சேவையில் ஈடுபடும் பேருந்துகளை பரிசோதிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் அதேவேளை அனுமதிக்கப்பட்ட பேருந்துகளின் இலக்கங்களை ஊடகவாயிலாக அறிவிக்க இருப்பதாகவும், அதன் மூலம் பொது மக்கள் தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ள முடியுமென இன்று யாழ் பிராந்திய சிரேஸ்ட...