இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் கட்சிக்கிளையின் சார்பில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்தின் கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் கட்சியின் மாவட்டக்கிளையின் தலைவரும் பா.உறுப்பினருமான சி.சிறீதரன் தலைமையில் இவ் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில், தலைவர் மாவை. சேனாதிராஜாவுக்கு வடமாகாணசபை அமைச்சர் குருகுலராஜா உறுப்பினர் அரியரத்தினம் கரைச்சி பிரதேசபை உபதவிசாளர் நாவை.குகராஜா கரைச்சி பிரதேசசபை உபதவிசாளர் உறுப்பினர்கள் கட்சியின் மாவட்டக்கிளையின்...
      வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுடனான சந்திப்பு வவுனியா உள்ளக சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பல்நோக்கு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(12) காலை நடைபெற்றது. மாவட்ட ரீதியாக கிராம அபிவிருத்தி சங்கங்களின் செயற்பாடுகளை நேரில் சந்தித்து அறிந்துகொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒர் அங்கமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது. வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் நேரடியாக...
MOSSAD, KGB , CIA போன்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர்கள் சில தான். ஆனால் 450 க்கும் மேற்பட்ட பரிச்சயமில்லாத உளவு நிறுவனங்கள் பல்வேறு அரசுகளுக்காக உலகம் முழுவதும் இன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு அரசின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான அங்கமாக உளவு அமைப்புகள் இன்று கருதப்படுகிறது. இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தான் ஒரு தமிழன். போர் செய்வதற்கு முன்பு எதிரிகளின் படை பலத்தை அறிந்து வருவதற்காக மட்டும் ஒற்றர்கள்...
வடமாகாணசபையின் அபிவிருத்தி நோக்கிய திட்டங்களில் ஒரு அங்கமாக இன்று முழங்காவில் கிருஸ்ணபுரம் பகுதியில் முழங்காவில் மாதர்சங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் இன்று வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனால் கோழிக்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. வடமாகாணத்தின் மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியினால் வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் அமைச்சர் டெனீஸ்வரனின் பணிப்பின்பேரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இன்று இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதை அறிந்து நிகழ்விற்கு மக்களை செல்லவிடாது தடுக்கும் நோக்கில்...
  பாப்பரசர் பிரான்சிஸ், இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வருகை தருவார் என்று இலங்கை கத்தோலிக்க திருச்சபை இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கொழும்பு ஆயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது. அத்துடன் பாப்பரசர் வருகையை ஒட்டி உத்தியோகபூர்வமான இலட்சினையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஹிந்து பத்திரிகைக்கு செவ்வியளித்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், அரசாங்கத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார் என்று ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. அரசாங்கத்துடன் பேசுவதற்கு தாம் எந்த நேரத்திலும் தயார். எனினும் அதற்கு ஒரு...
1986ம் ஆனி பத்தாம் திகதி. யாழ்ப்பாணம் குருநகர் ஒவ்வொரு வீடுகளிலும் சோகம் பற்றிப் படர்ந்து கொண்டிருந்தநாள். மணித்தோள் நிமிர்த்திய தொழிலாளர்களை அங்கமங்கமாக வெட்டிக்கொன்றனர். சதைக் குவியலில் யார் யாருடைய அவையங்கௌன தெரியாது அள்ளி குழியில் இட்ட நாள். இயற்கையான சாவனாலும்-வயது முதிந்த சாவானாலும் சாவு ஒரு துயரமானதாகவே இருக்கும். மண்டைதீவில் நடந்த படுகொலைகள் குரூரத்தின் உச்சக்கட்டம். மனிதமற்ற கோரக் குதறலின் சிலுவைப் பாடுகளை மிஞ்சி கோரணியம் அன்றாடச் சீவியத்திற்கு உழைக்கப் போனவர்களுக்கு...
தமீழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளராக இருந்த பொட்டம்மான், ஹாங்காங் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவால் பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது சண்முகலிங்கம் சிவசங்கர் என்ற இயற்பெயருடைய பொட்டம்மான் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் தப்பிச் சென்று விட்டார் என்று பல காலமாகவே பேச்சு இருந்தது. அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கனடா நாட்டில் இருப்பதாகவும், ஹாங்காங் நாட்டிற்கு தப்பிச் சென்ற பொட்டம்மான் அங்கிருந்து கனடா செல்ல முயன்ற போது கைது...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் இது பற்றித் தெரிவிக்கையில், பாலச்சந்திரன் விவகாரம் குறித்து நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். இராணுவம் இதனை செய்திருக்கும் எனத் தாம் கருதவில்லை என்றும், எனினும் இது உண்மையா என்பது தனக்குத்...
  சூளைமேட்டுப் படுகொலை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகத் தேவையில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்று, அதற்குப் பதிலாக இலங்கையிலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஊடாக வீடியோ கென்வரன்ஸ் மூலம் சாட்சியமளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலை தொடர்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பின்னர் நடந்த வழக்கு விசாரணைகளுக்கு அவர்...