மகளுக்காக புதிய படம் இயக்க முடிவு செய்துள்ளார் அர்ஜூன்.ஆக்ஷன் ஹீரோ அர்ஜுனுக்கு 90களில் சருக்கல் ஏற்பட்ட போது தானே களத்தில் குதித்தார். ‘சேவகன், ‘பிரதாப், ‘ஜெய் ஹிந்த் என தனது படங்களை தானே இயக்கி நடித்தார். இதில் அவருக்கு மீண்டும் மார்க்கெட் சூடு பிடித்தது. தற்போது ‘ஜெய்ஹிந்த் பார்ட் 2 இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவரது மகள் ஐஸ்வர்யா நடிகை ஆனார். விஷால் ஜோடியாக ‘பட்டத்து யானை என்ற...
   ரஜினியின் ‘முத்து, ஸ்ரீதேவியின் ‘இங்லிஷ் விங்லிஷ் படங்கள் ஜப்பானில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் படங்களின் வெளிநாட்டு சினிமா வர்த்தகத்தில் இப்போது ஜப்பானும் இடம்பிடித்திருக்கிறது. இதில் தமிழ் திரையுலகினர் கவனம் திரும்பி இருக்கிறது. இதை குறிவைத்து ‘ஜம்போ 3டி தமிழ்படம் ஜப்பானில் படமாகிறது. இதுபற்றி இயக்குனர் ஹரி-ஹரிஸ் கூறியது:விரைவில் வரவிருக்கும் ‘ஆ திகில் படத்தின் ஒரு சில காட்சிகளை ஜப்பானில் படம் பிடிக்கச் சென்றபோது டோக்கிய திரைப்பட...
நடிகை அனுஷ்கா ராணியாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்தது.டோலிவுட் பட இயக்குனர் குணசேகர் இயக்கும் படம் ‘ருத்ரம்மாதேவி. இது இவரது கனவு படமாக உருவாகி வருகிறது. ராணி வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இதற்காக அவருக்கு சிறப்பு காஸ்டியூம் வடிவமைக்கப்பட்டது. 13ம் நூற்றாண்டின் காகத்தியா அரச பரம்பரையின் கதையாக இது உருவாகிறது. ரானா, பிரகாஷ் ராஜ் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர். கடந்த 1 வருடமாக நடந்து வந்த இப்படத்தின்...
லண்டன் அருகே பெட்போர்ட்சைர் என்ற இடத்தில் லுடா என்ற விமான நிலையம் உள்ளது. இங்கு பெரும்பாலும் சிறிய விமானங்கள் வந்து செல்லும். இந்த நிலையில் விமான நிலையத்தில் சந்தேகப்படும் நிலையில் மர்ம பார்சல் ஒன்று கிடந்தது. அது வெடிகுண்டு ஆக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் விமான நிலையத்தில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே விமான நிலையத்தில் இருந்த 1600 பயணிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும் விமான நிலையத்துக்கு வரும் அனைத்து ரோடுகளும்...
பெருமளவிலான இந்தியர்கள் நரேந்திர மோடியை நவீன மோச ஸாக முன்னிறுத்துகிறார்கள். வீதிகளில் பாலாறும் தேனாறும் ஓடுமாறு செய்யும் வல்லமை அவருக்கு உண்டு என்றும் பிர தமராக வருவதற்கு மோடியே சரியான தேர்வு என்றும் அவர்கள் சொல்கிறார்கள். பாரதீய ஜனதா கட்சியும் ஆர்.எஸ்.எஸ் மட்டும் இதைச் சொல்லவில்லை. படித்தவர்கள் என்று அறியப்பட்ட இளைஞர்களும் கூட திரு மோடியின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு இப்படிச் சொல்கிறார்கள். 2002ல் குஜராத்தில் கொல்லப்பட்ட 2000 முஸ்லிம்கள் பற்றி...
உக்ரைனின் கிழக்கு பகுதியில் மெஜாரிட்டி ஆக வாழும் ரஷிய ஆதரவாளர்கள் தங்களுக்கு தன்னாட்சி உரிமை கோரி போராட்டம் நடத்தினார்கள். அது தீவிரமடைந்து உள்நாட்டு போர் ஆக மாறியது. அதில் 3000 பேர் பலியாகினர். கிழக்கு உக்ரனை சேர்ந்தவர்களுக்கு அண்டை நாடான ரஷியா ஆயுதம் மற்றும் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. எனவே ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்தன. அதைத்தொடர்ந்து தற்போது உக்ரைன் அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே...
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெக்ரிக்–இ–இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், ‘பாத்’ கட்சி தலைவர் மதகுரு தாகிருல் காத்ரி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த மாதம் (ஆகஸ்ட்) 14–ந்திகதி முதல் இஸ்லாமாபாத் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு சுமார் 70 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை சம்பவங்களில் இறங்கியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 8 பேர்...
சிரியா மற்றும் இராக்கில் தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்த கடுமையாகப் போராடிவரும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் உள்ள ஷரியா காவல் பிரிவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள் பணியாற்றிவருவதான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சிரியாவின் ரக்கா நகரத்தில் செயல்பட்டுவரும் இந்த அல் கன்சா பிரிவு போராளிகளின் கட்டுப்பாட்டில் அவர்களின் தலைமையகமாக செயல்பட்டுவருகின்றது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பிரிவானது பெண்கள் வேடத்தில் பணி புரியும் ஆண்களைக் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று...
ஈராக்கில் கடந்த 2006ஆம் ஆண்டில் அமெரிக்க அரசின் உதவியுடன் பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட நூரி அல் மாலிகி தன்னிச்சையாக அதிகாரங்களை ஏற்றுக்கொண்டதுடன் பழங்குடி மற்றும் சன்னி சிறுபான்மையினரை ஒதுக்கி வைத்திருந்தார். இதனால் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் கலவரத்தில் ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதி மக்கள் பெரும் போராட்டங்களைச் சந்தித்து வருகின்றனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலைக் கைப்பற்றியுள்ள போராளிகள் அங்கிருந்த அரசுத் துருப்புகளையும் சிதற...
பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது. 2013-ல் முதல் குழந்தை பிரின்ஸ் ஜார்ஜை பெற்றெடுத்த மிடில்டன், பதினான்கு மாதத்திற்குள் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சி செய்தியை வில்லியம்சும்-மிடில்டனும் சேர்ந்து வெளியிட்டனர். இச்செய்தி அறிந்ததும் ராணியும், பாட்டியுமான இரண்டாம் எலிசபெத் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்ததாக அரண்மனை செய்திக்குறிப்பு  தெரிவித்துள்ளது.